விளையாட்டுக்கு முட்டுக்கட்டை ஏன்? சேவல்கட்டுக்கு சிறப்பு பயிற்சி! சேவல் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை

Added : ஜன 06, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:ஜல்லிகட்டு, ரேக்ளா போட்டிக்கு அனுமதித்தது போன்று, சேவல்சண்டை விளையாட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பண்டைய காலங்களில், தமிழர்களின் பொழுதுபோக்கு விளையாட்டாகவும், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும், ரேக்ளா போட்டி, ஜல்லிகட்டு விளையாடி மகிழ்ந்தனர். அதேபோன்று, சேவல் விளையாட்டும் கிராமங்களில் பிரபலம்.கிராமங்களில்
விளையாட்டுக்கு முட்டுக்கட்டை ஏன்?  சேவல்கட்டுக்கு சிறப்பு பயிற்சி! சேவல் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை

பொள்ளாச்சி:ஜல்லிகட்டு, ரேக்ளா போட்டிக்கு அனுமதித்தது போன்று, சேவல்சண்டை விளையாட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பண்டைய காலங்களில், தமிழர்களின் பொழுதுபோக்கு விளையாட்டாகவும், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும், ரேக்ளா போட்டி, ஜல்லிகட்டு விளையாடி மகிழ்ந்தனர். அதேபோன்று, சேவல் விளையாட்டும் கிராமங்களில் பிரபலம்.கிராமங்களில் உள்ள தோப்புகளில், சேவல்களை மோத விடும் விளையாட்டு, சேவல் கட்டு என, கூறுகின்றனர். 'உந்தியடி, விடாதே...' என சேவல் வளர்ப்பாளர்கள் (கோச்) சப்தமிட, பிடரி முடியை சிலிர்த்துக்கொண்டு, 'கொக்... கொக்...' என, பறந்தும், பாய்ந்தும் சேவல்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும்.தேர்வு முறைசேவல் குஞ்சாக இருக்கும் போதே, அதன் அமைப்பு, கழுத்து, இறகுகள் பார்த்து தேர்வு செய்து வாங்கப்படுகிறது. இதனை தனியாக வளர்த்து முறையாக பயிற்சி கொடுத்து சண்டைக்கு தயார்படுத்தும் விதமும் ஒரு கலையாகத்தான் பார்க்கப்படுகிறது. வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்த சேவல் வளர்ப்பு ஆர்வலர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:கருங்காகம், பொன்றக்காகம், வெண்காகம், சித்திர புலி, காகக்கீரி, பொன்றக்கீரி, பொன்ற பூதி, பொன்ற வெள்ளை, காகக்கருப்பு என பல வகையான சேவல்கள் உள்ளன. சேவல் குஞ்சாக இருக்கும் போது, தனியாக கூண்டு அடித்து வளர்க்கப்படும். சண்டைக்கு தயார் செய்யப்படும் சேவலுக்கு சத்தான ராகி, கம்பு, கோதுமை, பாதாம், பிஸ்தா உணவாக வழங்கப்படுகிறது.சிறப்பு பயற்சிகோழிகளுடன் சேர விடாமல் தனியாக பயிற்சி கொடுக்கப்படுகிறது. போட்டிக்கு சில மாதங்களுக்கு முன், சேவல்களை தேர்வு செய்து பயிற்சி வழங்கப்படுகிறது. உயரம் தாண்டுதல், பறந்து, பாய்ந்து தாக்குதல் போன்ற பயிற்சியுடன் வாரத்தில் இரண்டு நாட்கள் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர்.வெப்போர், கத்தி கட்டு என இரண்டு வகையான சேவல் சண்டை உள்ளது. களத்தில், இரண்டு சேவல்களையும், எதிரி இது தான் என அடையாளம் காட்டப்படுகிறது. இரு சேவல்களையும் தட்டிக்கொடுத்து, எதிரெதிரே நிறுத்தி விட்டால், சண்டைக்கு தயார் என, அர்த்தம். கையில் எடுத்து, தடவிக் கொடுத்தால், சண்டை முடிந்தது என, அவைகள் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சியளிக்கப்படுகிறது.வீர விளையாட்டுசண்டையில், சேவல்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும். ஐந்து அல்லது 10 நிமிடங்கள் வரையான சண்டைக்கு பின், ஓய்வு அளிக்கப்படும். சேவலுக்கு தண்ணீர் கொடுப்பதுடன், ஈரத்துணியால், காயமடைந்த இடத்தில் துடைத்து மீண்டும் சண்டைக்கு விடப்படும். ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக சண்டை நடக்கும். வெற்றி பெறுபவர்களுக்கு, தோற்ற சேவலை வழங்க வேண்டும்.பண்டைய தமிழர்கள் வாணிபம் செய்த இடங்களிலும், புலம் பெயர்ந்த இடங்களிலும் சேவல் சண்டை நடைபெறுகிறது. சேவல் சண்டை நடத்த சில விதிமுறைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், தமிழகத்தில் இதுவரை அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால், அதனை வளர்த்து அழகு போட்டிக்கு அழைத்து செல்கிறோம். மேலும், வெளி மாநிலங்களில் இதனை வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.தமிழகத்தின் சேவல் வீரம் மிகுந்தது என்பதால், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்து, ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். ஒரு சேவல், 50 ஆயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். ஜல்லிகட்டு, ரேக்ளா போட்டிக்கு அனுமதி கொடுத்தது போன்று, விதிமுறைகள் விதித்து சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்க வேண்டும். விதிமீறல்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு குழு அமைக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.சாஸ்திரம் பார்த்து மோதல்!தமிழகத்தில், முன்னோர்கள் காலத்தில், பறவைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதில், சேவல் சண்டைக்கும், பஞ்சபட்சி சாஸ்திரத்துக்கும் தொடர்பு உள்ளது. சேவல் நிறம், வடிவம், குணம் ஆகியவை கொண்டு, இந்த சாஸ்திரத்தை முன்னோர்கள் எழுதியுள்ளனர். பஞ்சபட்சி சாஸ்திரம் பார்த்து, எதிரணியினர் சேவலை வீழ்த்த, வியூகம் அமைக்கப்படுவது இன்னும் நடைமுறையில் உள்ளது.அதேபோன்று, சேவல் வளர்ப்பாளரின் ராசி, நட்சத்திரத்துக்கு ஏற்ப, சேவல் ரகம், நிறம் தேர்வு செய்யும் முறையும் உள்ளது. காளை மாடு, குதிரைக்கு சுழி பார்த்து வாங்குவது போன்று, சேவலின் நிறம், ரகம் பார்த்து தேர்வு செய்யும் முறை உள்ளது. இன்று வரையிலும், இதனை கடைபிடித்தே, சேவல் வளர்ப்பும், விளையாட்டும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X