சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

மூச்சுப்பயிற்சி அனைவருக்கும் அவசியம்!

Added : ஜன 06, 2022 | கருத்துகள் (2)
Advertisement
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: ஒரு மனிதன் தன் மூச்சை சரியான முறையில் பயன்படுத்தி, சரியாக மூச்சுப் பயிற்சி செய்தால், அவன் வாழ்க்கையில் நோய் என்பதே எட்டிப் பார்க்காது. இது, திருமூலர் சொன்னது. 16 வினாடிகள் பிராண வாயுவை உள்ளே இழுக்கணும்; 64 வினாடிகள் அந்த பிராண வாயுவை உள்ளேயே தேக்கி வைக்க வேண்டும். அடுத்து, தேக்கி வைத்த பிராண வாயுவை, 32 வினாடிகள் வெளியேற்ற வேண்டும். அடுத்து, 16
சொல்கிறார்கள்

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: ஒரு மனிதன் தன் மூச்சை சரியான முறையில் பயன்படுத்தி, சரியாக மூச்சுப் பயிற்சி செய்தால், அவன் வாழ்க்கையில் நோய் என்பதே எட்டிப் பார்க்காது. இது, திருமூலர் சொன்னது. 16 வினாடிகள் பிராண வாயுவை உள்ளே இழுக்கணும்; 64 வினாடிகள் அந்த பிராண வாயுவை உள்ளேயே தேக்கி வைக்க வேண்டும். அடுத்து, தேக்கி வைத்த பிராண வாயுவை, 32 வினாடிகள் வெளியேற்ற வேண்டும். அடுத்து, 16 வினாடிகள் மீண்டும் பிராண வாயுவை உள்ளே இழுக்காமல், வயிற்றை காலியாக வைத்திருக்க வேண்டும்.இதை தொடர்ந்து செய்தால் சிந்தனையில் தெளிவும், நேர்த்தியும் வரும்; சிறந்த முறையில் முடிவெடுக்க முடியும். எதை செய்தாலும், செய்ய முடியவில்லை என்றாலும், தியானம் செய்வதை மறக்காமல், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.நம் ஆரோக்கியத்துக்கு உணவுப் பழக்கம் ரொம்ப முக்கியம். இந்த தலைமுறையில், 'ஒபிசிட்டி' எனும் உடல் பருமன் பெரிய பிரச்னையாக இருக்கிறது. உணவில், 'கார்போஹைட்ரேட்' எனப்படும் மாவுப்பொருளை அதிகமாக எடுக்கும் நாம், புரோட்டீனையும், நார்ச்சத்தையும் போதுமான அளவு எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக, சிறு தானியங்களை எடுத்துக் கொள்வதே இல்லை.என் சிறு வயதில் கிராமத்தில் சாப்பிட்ட சிறு தானியங்களும், இயற்கையான உணவுகளும், அங்குள்ள வாழ்க்கை முறையும் தான் எனக்கு, 'பிட்னஸ்' என்ற வார்த்தை அறிமுகமாகும் முன், உடல் தகுதியை கொடுத்தது.காலையில் மூன்றில் ஒரு பங்கை பச்சை உணவாக சாப்பிடுகிறேன். முளை கட்டிய பயறு வகைகள் மற்றும் பழங்கள் எடுத்துக் கொள்கிறேன். மதியம் சாதம், நிறைய காய்கறிகள் எடுத்துக் கொள்வேன். மிக முக்கிய விஷயம் தண்ணீர். வேலை வேலைன்னு தண்ணீர் குடிப்பதையே மறந்து விடுகிறோம். அதனால், அவ்வப்போது 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் வாங்கி வைத்து, எவ்வளவு தண்ணீர் குடிக்குறோம்ன்னு தினமும் கவனித்து அருந்துகிறேன். முடிந்த அளவு நேரத்துக்கு துாங்கி விடுவேன்.கடைசியா நான் சொல்றது இது தான்... தாமரை இலை மேலே இருக்கிற தண்ணீர் போல் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், வாழ்க்கையில் பாதி பிரச்னை குறைந்து விடும். திட்டும் போதும் சரி, பாராட்டும் போதும் சரி, பெருசா தலையில ஏத்திக்க கூடாது.இன்று இருக்கும் உலகம் நாளை மாறி விடும்; எதுவுமே நிரந்தரம் இல்லை. எனவே, கோபங்கள், சங்கடங்கள், 'ஈகோ'வை நாம் ஏன் தாங்கிட்டு நடக்கணும்... அவற்றை உதறி தள்ளி விட்டாலே நம் உடம்பு, நம் பேச்சை கேட்கும்!

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seenivasan - singapore,சிங்கப்பூர்
07-ஜன-202208:46:53 IST Report Abuse
seenivasan நல்ல பழக்கங்கள். நன்றி சார்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-ஜன-202204:36:20 IST Report Abuse
J.V. Iyer அருமையான யோசனை.. அனைவரும் பின்பற்றவேண்டும். நன்றி தலைவரே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X