ஸ்ரீநகர்: பிரதமரின் விஷயங்கள் பெரிதுபடுத்தப்பட்டு எதிர்கட்சியினர் விஷயங்கள் மறைக்கப்படுகின்றன என குற்றஞ்சாட்டியுள்ள ஜம்மு காஷ்மீர் தலைவர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைவர்களான மெகபூபா முப்தி, ஓமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா ஆகியோருக்கு வழங்கப்பட்ட மத்திய சிறப்பு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை மத்திய பாஜ., அரசு திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பதற்றம் நிலவும் மாநிலங்களின் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர்கள் இதற்காக இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒமர் அப்துல்லா மத்திய பாஜ., அரசு திட்டமிட்டு சிறப்பு பாதுகாப்பை விலகிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். பாஜ., அரசின் இந்த செயலுக்குப் பின்னால் அரசியல் உள்ளதாகவும் தங்களுக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது தங்களது கருத்துகளை மக்களிடையே பகிர தங்கள் தயங்குபவர்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படும் என்று தங்களிடம் முன்னரே அறிவிக்கப்பட வில்லை என்று மெகபூபா முப்தி உள்ளிட்ட சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பிரதமர் மோடியின் வாகனம் மறிக்கப்பட்டது.
இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் தங்களுக்கு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட தகவல் பலருக்கு தெரியாது. இதுபோல பிரதமரின் செயல்பாடுகள் வெளியுலகிற்கு காண்பிக்கப்படுவதும் எதிர்க்கட்சிகள் குறித்த விவரங்கள் அதிகமாக வெளியில் தெரியாமல் போவதும் வாடிக்கையாகிவிட்டது என்று இந்த நான்கு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE