மும்பை :மஹாராஷ்டிராவில் ஓரினச் சேர்க்கையாளர்களான இரு பெண் டாக்டர்கள் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்தனர். விரைவில் கோவாவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தனர்.
மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த பெண்கள் பரோமிதா முகர்ஜி - சுரபி மித்ரா. டாக்டர்களான இவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் நாக்பூரில் சமீபத்தில் நடந்தது; இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
இந்த உறவு குறித்து பரோமிதா முகர்ஜி கூறுகையில், ''நான் ஓரின சேர்க்கையாளர் என்பதை, என் தந்தையிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன். என் தாய்க்கு சமீபத்தில் தான் தெரியவந்தது. முதலில் அதிர்ச்சியானவர், என் சந்தோஷத்துக்காக ஏற்றுக் கொண்டார்,'' என்றார்.
சுரபி மித்ரா கூறுகையில், ''என்னை பற்றிய விபரம் என் பெற்றோருக்கு முன்பே தெரியும். அவர்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை,'' என்றார்.
இவர்களது திருமணம் கோவாவில் விரைவில் நடக்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE