ராஜேந்திர பாலாஜி கைதில் அவசரம் ஏன்?தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 07, 2022 | |
Advertisement
புதுடில்லி ;'மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, அவசரமாக கைது செய்தது ஏன்? அரசியல் பழிவாங்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் தமிழக
ராஜேந்திர பாலாஜி ,தமிழக அரசு, உச்ச நீதிமன்றம், கேள்வி!

புதுடில்லி ;'மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, அவசரமாக கைது செய்தது ஏன்? அரசியல் பழிவாங்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் தமிழக பட்டு
உள்ளன.


latest tamil news



முன்ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கைது செய்வதற்காக, தமிழக போலீசார் கடந்த சில நாட்களாக அவரைத் தேடி வந்தனர். கர்நாடக மாநிலத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்
பட்டார்.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ராஜேந்திர பாலாஜியை அவசர அவசரமாக போலீசார் கைது செய்துள்ளதாக, அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே
குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாவது:இந்த மனு விசாரணைக்கு வருகிறது என்பது தமிழக அரசுக்கு தெரியாதா? அவசர அவசரமாக ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
இந்த விசாரணைக்கு காத்திராமல் அவசரமாக கைது செய்யாவிட்டால் வானம் என்ன இடிந்தா விழப் போகிறது; இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செய்யப்பட்டதா?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக பதில்அளிக்கும்படி தமிழக அரசுக்கு அவகாசம் அளித்து, வழக்கின் விசாரணை 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X