அம்மா உணவகத்தை மூடினால் என்ன? * அமைச்சர் துரைமுருகன் கேள்வி| Dinamalar

அம்மா உணவகத்தை மூடினால் என்ன? * அமைச்சர் துரைமுருகன் கேள்வி

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 07, 2022 | கருத்துகள் (47) | |
சென்னை : ''அம்மா உணவகத்தை மூடினால் என்ன,'' என, அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்ப, ''அதன் பலனை அனுபவிப்பீர்கள்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பதில் அளித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: அம்மா உணவகத்தில் பணியாளர் எண்ணிக்கை; அவர்கள் ஊதியம்; பொருட்கள் அளவு எல்லாம் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கிய அளவு பொருட்கள்; ஊதியம் வழங்க
  அம்மா உணவகம், மூடினால், அமைச்சர் துரைமுருகன் கேள்வி

சென்னை : ''அம்மா உணவகத்தை மூடினால் என்ன,'' என, அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்ப, ''அதன் பலனை அனுபவிப்பீர்கள்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பதில் அளித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: அம்மா உணவகத்தில் பணியாளர் எண்ணிக்கை; அவர்கள் ஊதியம்; பொருட்கள் அளவு எல்லாம் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கிய அளவு பொருட்கள்; ஊதியம் வழங்க வேண்டும். அதே பணியாளர் எண்ணிக்கை தொடர வேண்டும்.


latest tamil news





அமைச்சர் நேரு: அம்மா உணவகம் எங்கும் மூடப்படவில்லை. 1,700 ரூபாய் விற்பனையாகும் இடத்தில், 30 பேர் வேலை செய்கின்றனர்; 9,000 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது. எனவே, சுழற்சி முறையில் பணி வழங்குகிறோம். பணியாளர்களை குறைக்கவில்லை. உங்கள் ஆட்சியில் நடந்தது போல நடக்கிறது.

அமைச்சர் துரைமுருகன்: அதை மூடினால் தான் என்ன; நீங்கள் எத்தனையை மூடி உள்ளீர்கள். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் பெயர் இல்லை. கருணாநிதி பெயரில் இருந்ததை, எத்தனை மூடி உள்ளீர்கள். நாங்கள் ஒன்றைதானே மூடி உள்ளோம்.

பழனிசாமி: நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். மூடினால் பலனை அனுபவிப்பீர்கள். ஏழை மக்கள் தகுந்த தண்டனை கொடுப்பர்.
முதல்வர்: உங்கள் ஆட்சியில் கருணாநிதி பெயரை மூடி மறைத்ததால், மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பழனிசாமி: எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X