இது உங்கள் இடம்: ஒரே சால்வையில் உத்தமராகலாம்!

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 07, 2022 | கருத்துகள் (59)
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் திமலர் நாளிதழில் எழுதிய கடிதம்: எஸ்.மணிகண்டன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனிப்படை போலீசார் மூலம் கைது செய்யப்பட்டிருக்கிறார். எட்டு தனிப்படைகள் அமைத்து வலை வீசி தேடி கண்டுபிடிக்கும் அளவுக்கு, அவர் அப்படி என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார்? கொலை
Senthil Balaji, Rajendra Balaji, DMK, ADMK


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் திமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


எஸ்.மணிகண்டன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனிப்படை போலீசார் மூலம் கைது செய்யப்பட்டிருக்கிறார். எட்டு தனிப்படைகள் அமைத்து வலை வீசி தேடி கண்டுபிடிக்கும் அளவுக்கு, அவர் அப்படி என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார்? கொலை செய்தாரா, கொள்ளை அடித்தாரா, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாரா, இல்லை போதைப் பொருள் கடத்தினாரா?

அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, 3 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார்; அவ்வளவு தான். இதே தவறைத் தானே, தற்போது மின் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியும் செய்திருந்தார். இவரை கட்சியில் இணைத்து, அமைச்சர் பதவி கொடுத்து கவுரவித்த தி.மு.க., அரசுக்கு, ராஜேந்திர பாலாஜி செய்தது மட்டும், மிகப் பெரிய குற்றமாக தெரிவது ஆச்சரியமாக உள்ளது.


latest tamil news


நம் பார்வையில், ராஜேந்திர பாலாஜி பிழைக்க தெரியாத அப்பாவியாகவே காட்சி அளிக்கிறார். 2016 டிச., 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தினகரனுக்கு ஆதரவாக சென்றார், செந்தில் பாலாஜி. ஆனால் தினகரனால், அ.தி.மு.க.,வை கைப்பற்றவோ, காப்பாற்றவோ முடியாது என்று தெரிந்தவுடன், ஒரு சால்வை எடுத்துச் சென்று, ஸ்டாலினுக்கு போர்த்தி, தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.


latest tamil news


அவ்வளவு தானுங்க. அது நாள் வரை, தி.மு.க., கண்களுக்கு ஊழல்வாதியாக காட்சியளித்த செந்தில் பாலாஜி, ஒரே ஒரு சால்வை மூலம் உத்தமராகி விட்டார்; அவருக்கு எதிராக புறப்பட்ட மோசடி வழக்கும், 'புஸ்வாணம்' ஆனது. இது தானுங்க அரசியல்! கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து, எதிர் முகாமில் இருக்கும் ஊழல்வாதி, அணி மாறி வந்து ஒரு சால்வையை போர்த்தி விட்டால், உடனே உத்தமராகி விடுவார்!செந்தில் பாலாஜிக்கு இந்த சூட்சுமம் தெரிந்திருந்தது; தப்பித்து விட்டார். ராஜேந்திர பாலாஜிக்கு இந்த சூட்சுமம் தெரியவில்லை; சிக்கி விட்டார்!

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜன-202200:02:07 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K ஆக, திராவிட விதிகளின் படி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் "ஜால்ரா" அடித்தால் மந்திரியாகலாம். "ஜால்ரா" அடிக்கவில்லையென்றால் சிறை செல்லலாம். நல்ல பார்முலா !! விளங்கிடும் தமிழ்நாடு ☺️☺️
Rate this:
Cancel
07-ஜன-202219:29:39 IST Report Abuse
ஆரூர் ரங் MGR அதிமுக வைத் துவக்கிய போது கைசுத்தமான ஆட்களை மட்டுமே சேர்ப்பேன் 🥲என்றார். சேருபவர்கள் விவரம் வாங்கி வடிகட்டிய பிறகுதான் சேர்ப்பேன் என்றார். போகப்போக திமுக வின் ஊழல்வாதிகள் முக்கால்வாசி பேர் அதிமுக வில் சேர்ந்து விட்டனர். கண்டிஷன்களெல்லாம் செத்தன. 🤕 திராவிஷம் வளர்ந்தது . இப்போகூட எட்டு முக்கிய இலாகாக்கள் முன்னாள் ஜெயாசசி அடிமைகள் வசம்
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
08-ஜன-202201:22:30 IST Report Abuse
John Millerமுருகன், அண்ணாமலை தலைமையில் பாஜாகாவில் ரவ்டிகள் சேர்ந்தால் உடனே காந்தியாக மாறிவிடுவார்கள்....
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
07-ஜன-202219:00:40 IST Report Abuse
ponssasi குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஸ்டாலின் மீதான நம்பிக்கையும் குறைந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X