தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் நுழைய அனுமதி!

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 07, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுச்சேரி: 'புதுச்சேரி மாநிலத்திற்கு வருபவர்களுக்கு, மாநில எல்லையில் கொரோனா பரிசோதனை செய்து, 'நெகட்டிவ்' என வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்' என அறிவிக்கப் பட்டுள்ளது. புதுச்சேரி கலெக்டர் வல்லவன் கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவல் அச்சுறுத்தலை தொடர்ந்து, கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன.உணவகங்கள்,


புதுச்சேரி: 'புதுச்சேரி மாநிலத்திற்கு வருபவர்களுக்கு, மாநில எல்லையில் கொரோனா பரிசோதனை செய்து, 'நெகட்டிவ்' என வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்' என அறிவிக்கப் பட்டுள்ளது.



latest tamil news




புதுச்சேரி கலெக்டர் வல்லவன் கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவல் அச்சுறுத்தலை தொடர்ந்து, கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன.

உணவகங்கள், ஓட்டல்கள், பார்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் துறை நிறுவனங்கள், பியூட்டி பார்லர், சலுான், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடம், யோகா பயிற்சி மையங்கள் 50 சதவீத பேருடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் குடமுழுக்கு, பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்பின்றி மட்டுமே நடத்தப்பட வேண்டும்.ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து, மாநில எல்லைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.


latest tamil news




வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் பயணியர், தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வெளியில் இருந்து புதுச்சேரி வருவோருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் 'நெகட்டிவ்' என முடிவு வந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
07-ஜன-202215:38:26 IST Report Abuse
S.Baliah Seer இக்காலத்தில் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது.மக்கள் மவுனமாக இருப்பதால் எதை வேண்டுமானாலும் திணிக்கலாமா?வியாதி பெயரால் மனித உரிமை பறிக்கப்படுவது தவறு.WHO தலைவர் பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-ஜன-202210:52:02 IST Report Abuse
Ramesh Sargam அதேபோல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டும்தான் புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்லாமே ஏன் அதிகாரிகள் அப்படி யோசிப்பதில்லை.
Rate this:
Cancel
07-ஜன-202209:37:12 IST Report Abuse
Selvakumar Duraipandi 0 ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X