சீருடையை மதிக்காத ஆட்டோ டிரைவர்கள் அடாவடி; போதையில் பயணியரிடம் அட்டூழியம்

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 07, 2022 | கருத்துகள் (40)
Advertisement
சென்னை: மது அருந்தி பரவச நிலையில் ஆட்டோ ஓட்டுவது, சீருடை அணியாமல் கைலியுடன் உலாவுவது, ஓட்டுனர் இருக்கையில் மற்றொருவரையும் அமர வைப்பது என அட்டூழியம் செய்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.சென்னையில், 82 ஆயிரத்து, 700க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. பெரும்பாலான ஆட்டோ

சென்னை: மது அருந்தி பரவச நிலையில் ஆட்டோ ஓட்டுவது, சீருடை அணியாமல் கைலியுடன் உலாவுவது, ஓட்டுனர் இருக்கையில் மற்றொருவரையும் அமர வைப்பது என அட்டூழியம் செய்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சென்னையில், 82 ஆயிரத்து, 700க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடை அணிவது இல்லை. ஒழுங்கீனமாக கைலியுடன் உலா வருகின்றனர். பயணியரிடம் மிரட்டிப் பேசுவது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது, சுட்டிக்காட்டினால், 'ஆட்டோ தண்ணீரிலா ஓடுகிறது; நடந்து போக வேண்டியது தானே' என, நக்கல் அடிப்பது.கூடுதல் கட்டணம் கேட்டு பயணியரை பாதி வழியிலேயே இறக்கி விடுவது என, ஆட்டோ ஓட்டுனர்களின் அட்டகாசங்கள் எல்லை மீறிவிட்டன.
பகலிலும் கூட மது அருந்தி, பரவச நிலையில் இருப்பதால் தான் ஆட்டோ ஓட்டுனர்களின் அட்டகாசம் எல்லை கடந்து விட்டதாக பயணியர் குற்றஞ்சாட்டுகின்றனர்.latest tamil news
பக்கவாட்டு கண்ணாடியை உட்புறமாக பொருத்தி, அதன் வழியாக பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண் பயணியரை வக்கிர புத்தியுடன் ரசிப்பது என, அடாவடி செயலும் அரங்கேறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன், சாலையோரங்களை ஆக்கிரமித்து ஆட்டோ நிறுத்தங்களை ஏற்படுத்துதல், ஷேர் ஆட்டோ என்ற பெயரில் அளவுக்கு அதிகமான பயணியரை ஏற்றிச் செல்வது, பள்ளி நேரங்களில் குழந்தைகளை கணக்கு வழக்கின்றி மூட்டைபோல அள்ளிச் செல்வது போன்ற புகார்களும் தொடர்கின்றன.

இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஒழுங்குப்படுத்த வேண்டிய காவல் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளதாக, பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

தமிழக அரசு, 2013ல், 'ஆட்டோக்களில் கட்டாயம் மீட்டர் பொருத்த வேண்டும்' என, உத்தரவிட்டது.மேலும், 2 கி.மீ.,க்கு குறைந்தபட்ச கட்டணமாக, 25 ரூபாய்; அதற்கு மேல் ஓடக்கூடிய, ஒவ்வொரு கி.மீ.,க்கும், 12 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில், கட்டாயம், 'டிஜிட்டல் மீட்டர்' பொருத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதை செயல்படுத்த அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே, அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர்; அதன் பின், அதை கைவிட்டனர்.பதைபதைப்புசென்னையில், 99 சதவீத ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆட்டோ ஓட்டுனர்களின் தடாலடி போக்கால், பயணியர் பதைபதைப்புடன் செல்ல வேண்டி உள்ளது.

ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடை அணிய வேண்டும் என்பது கட்டாயம். கூடுதல் கட்டணம் வசூலித்தால், ஆட்டோவை பறிமுதல் செய்ய முடியும். ஆனால், காவல் மற்றும் போக்குவரத் துறை அதிகாரிகள், 'நமக்கு என்ன...' என்ற மன நிலையில் உள்ளனர்.


latest tamil news
இவர்கள் நினைத்தால், ஒரே நாளில் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களையும் சீருடை அணிய வைக்க முடியும். ஆனால், செய்வது இல்லை. கண்துடைப்புக்கு சில நாட்கள் மட்டுமே அபராதம் விதிக்கின்றனர்.சில ஆண்டுகள் முன், சென்னை முழுதும், 'அடாவடி' ஓட்டுனர்களுக்கு எதிராக, போக்கு வரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வந்தனர். தற்போது, 'சாலை பாதுகாப்பு வாரம்' என, பெயரளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி, போட்டோவுக்கு 'போஸ்' கொடுப்பவர்களாக உள்ளனர்.

ஆட்டோ ஓட்டுனர்கள், கொரோனா பரவல் கட்டுப்பாடு விதிகளையும் பின்பற்றுவது இல்லை.இவர்கள் மீது, இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பயணியருக்கு பாதுகாப்பு என்ற நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஏன் இந்த அலட்சியம்?சென்னை போலீசில் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த பிரதீப்குமார், நவம்பரில், கோவை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதனால், தற்போது ஐ.ஜி., ரேங்கில், தலைமையிடத்து கூடுதல் கமிஷனர் லோகநாதன் தான் போக்குவரத்து பிரிவையும் கவனிக்கிறார்.
அதிகாரிகள் முழு கவனம் செலுத்தாததால், சென்னையில் போக்குவரத்து பிரச்னைகளுடன், ஆட்டோ ஓட்டுனர்களின் அடாவடிகளும் அதிகரித்துள்ளது.தமிழகம் முழுதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி.,யாக உள்ள பிரமோத் குமாரிடம் உள்ளது. அவரும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhinagaran - Chennai,இந்தியா
09-ஜன-202210:37:00 IST Report Abuse
Dhinagaran ஊருல என்ன விஷயமா நடக்குது எவ்ளோ யூனிபார்ம் போடாம போனதுக்கு ஒட்டுமொத்த ஓட்டுனர்களையும் சொல்றது சரி கிடையாது அவங்க பர்சனல் நியூஸ் ஆக கூட போயிருக்கலாம்
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
07-ஜன-202218:00:41 IST Report Abuse
V.B.RAM ஆட்டோவை பறிமுதல் செய்ய முடியும்?? நல்ல ஜோக். போலீஸோட ஆட்டோவை போலீஸ் பறிமுதல் செய்து என்ன பயன். தமிழ் நாட்டின் சாபக்கேடு இந்த ஆட்டோ. மற்ற மாநிலத்தில் இல்லை, இங்கு பெங்களூரில் கூட பத்து சதவீதம் தவிர மற்ற ஆட்டோக்காரர்கள் மிக நல்லவர்கள். அந்த பத்தும் கூட தமிழர்கள்தான்
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
07-ஜன-202215:29:23 IST Report Abuse
C.SRIRAM "50" சதவீதத்துக்கும் மேலான சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டமானவர்கள் . சென்னையின் சாபக்கேடு . அடாவடி , ரவுடித்தனம் எல்லாம் இவர்களிடம் உண்டு. தமிழகத்தின் மற்ற நகர்களில் மற்றும் அண்டை மாநிலங்களில் இதெயெல்லாம் பார்க்க முடியாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X