செங்கல்பட்டு: என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 07, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
உத்திரமேரூர்: செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் போலீசா் நடத்திய என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நடந்த இரட்டை கொலை தொரடர்பாக உத்திரமேரூரில் ரவுடிகள் மொய்தீன் , தினேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் அழைத்து வந்தனர். இந்நிலையில் ரவுடிகள் நாட்டு வெடிகுண்டை வீசி தப்ப முயற்சித்தனர். இதனையடுத்து

உத்திரமேரூர்: செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் போலீசா் நடத்திய என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.



latest tamil news


செங்கல்பட்டு மாவட்டம் சின்னநத்தம் பகுதியில் 38 வயது கார்த்திக் என்பவரின் வீடு உள்ளது. இவர் மீது இரண்டு கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது. செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார். நேற்று மாலை 6.30 மணி அளவில் அங்கு சென்றார். கையெழுத்து போட்ட பின் அருகே இருந்த டீ கடையில் 6.45 மணி அளவில் நின்று கொண்டு இருந்தார். பல்சரில் வந்த மூன்று பேர் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பினர். கார்த்திக் அதே இடத்தில் இறந்தார். அவர் உடலை பிரேத பரிசோதனைக்கு போலிசார் அனுப்பினர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போது , ஒரு பையில் இருந்த 5 ஐந்து குண்டுகளை கைப்பற்றினர். வெடிகுண்டு வீசிய அதே கும்பல், கார்த்திக் உறவினரான 20 வயது மகேஷ் என்பவர் வீட்டில் புகுந்தனர். டிவி பார்த்து கொண்டு இருந்த மகேஷை வெட்டி கொலை செய்து தப்பினர். தனிப்படை அமைத்து கொளையாளிகள் மொய்தீன் , தினேஷை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் செங்கல்பட்டு காட்டு பகுதியில் மறைந்து இருந்ததை கண்டுபிடித்தனர். போலீசார் அங்கு சென்ற போது ரவுடிகள் குண்டு வீசினர். இருவரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். கொலையில் தொடர்புடைய ரவுடி குணாவை தேடி வருகின்றனர்.


செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நடந்த இரட்டை கொலை தொரடர்பாக உத்திரமேரூரில் ரவுடிகள் மொய்தீன் , தினேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் அழைத்து வந்தனர். இந்நிலையில் ரவுடிகள் நாட்டு வெடிகுண்டை வீசி தப்ப முயற்சித்தனர். இதனையடுத்து போலீசார் சுட்டதில் மொய்தீன் , தினேஷ் 2 பேரும் இறந்தனர்.


latest tamil news



சம்பவ இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். சமீபகாலமாக ரவுடிகள் இடையே கோஷ்டி மோதல் இம்மாவட்ட மக்களை அதிர்ச்சி அடைய செய்திருந்தது. இன்று 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டது பரபரப்பாக பேசப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
07-ஜன-202218:23:08 IST Report Abuse
அறவோன் பாராட்டுக்குரிய சம்பவம் 👏👍
Rate this:
Cancel
Rajamani K - Chennai,இந்தியா
07-ஜன-202217:55:27 IST Report Abuse
Rajamani K ஐயோ பாவம். ஏதோ ஒரு கட்சியின் இரு முக்கியமான ஆட்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
07-ஜன-202215:40:36 IST Report Abuse
வெகுளி அடடே... திமுகவின் வாக்கு வங்கி சரிகிறதே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X