செங்கல்பட்டு: என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை | Dinamalar

செங்கல்பட்டு: என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 07, 2022 | கருத்துகள் (17) | |
உத்திரமேரூர்: செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் போலீசா் நடத்திய என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நடந்த இரட்டை கொலை தொரடர்பாக உத்திரமேரூரில் ரவுடிகள் மொய்தீன் , தினேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் அழைத்து வந்தனர். இந்நிலையில் ரவுடிகள் நாட்டு வெடிகுண்டை வீசி தப்ப முயற்சித்தனர். இதனையடுத்து

உத்திரமேரூர்: செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் போலீசா் நடத்திய என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.



latest tamil news



செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நடந்த இரட்டை கொலை தொரடர்பாக உத்திரமேரூரில் ரவுடிகள் மொய்தீன் , தினேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் அழைத்து வந்தனர். இந்நிலையில் ரவுடிகள் நாட்டு வெடிகுண்டை வீசி தப்ப முயற்சித்தனர். இதனையடுத்து போலீசார் சுட்டதில் மொய்தீன் , தினேஷ் 2 பேரும் இறந்தனர்.


latest tamil news



சம்பவ இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். சமீபகாலமாக ரவுடிகள் இடையே கோஷ்டி மோதல் இம்மாவட்ட மக்களை அதிர்ச்சி அடைய செய்திருந்தது. இன்று 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டது பரபரப்பாக பேசப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X