திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த, 235 பேருக்கு ஏழு நாள் வீட்டு தனிமை முடிந்த பின், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது; இதில், 168 பேருக்கு 'நெகட்டிவ்' என 'ரிப்போர்ட்' தெரிய வந்துள்ளது.

ஒமைக்ரான் பரவலை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வருவோர் டிச., முதல் வாரம் முதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். சென்னை, திருச்சி, கோவை விமான நிலையத்தில் இருந்து திருப்பூர் வந்த, 120 பேர் அம்மாத இறுதியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டுக்கு தனிமையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜன., முதல்வார நிலவரப்படி வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு, 235 பேர் வந்துள்ளனர். இவர்களில், ஏழு நாள் வீட்டுத்தனிமை நிறைவு செய்த, 171 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.68 பேருக்கு கொரோனா இல்லை. 'நெகட்டிவ்' என 'ரிப்போர்ட்' வழங்கப்பட்டுள்ளது; மூன்று பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மீதமுள்ள, 64 பேர் ஏழு நாள் வீட்டுத்தனிமை நிறைவு பெற்ற பின், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

முடிவு வந்தால் தெரியும்மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:
வெளிநாட்டில் இருந்து வந்த, 171 பேரை பரிசோதித்தில், 168 பேருக்கு கொரோனா இல்லை நெகட்டிவ் என வந்துள்ளது. கென்யாவில் இருந்த வந்த மூவருக்கு கொரோனா உறுதியாகி, 'எஸ் ஜூன் ' எனப்படும் ஒமைக்ரான் முதல் நிலை அறிகுறி தெரிய வந்துள்ளது.
இவர்களது ரத்த மாதிரி சென்னை மண்டல பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அம்முடிவுகள் வந்த பின் மற்ற விபரங்களை தெரிவிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE