மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 07, 2022 | கருத்துகள் (17)
Advertisement
புதுடில்லி: மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி., பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அறிக்கை செல்லும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளித்து, மத்திய அரசு
SupremeCourt, OBC, Reservation, NEETPG, சுப்ரீம் கோர்ட், ஓபிசி, இடஒதுக்கீடு,

புதுடில்லி: மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி., பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அறிக்கை செல்லும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளித்து, மத்திய அரசு கடந்தாண்டு அரசாணை வெளியிட்டது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வருவாய் உச்சவரம்பை 8 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளதை எதிர்த்து, சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்தக் கோரி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news


இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து கடந்த இரண்டு நாட்களாக விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ். போபண்ணா அமர்வு இன்று (ஜன.,7) தீர்ப்பளித்தது. அதில், மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அறிக்கை செல்லும் எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பாணையும் செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், 10 சதவீதம் இடஒதுக்கீட்டை பெறுவதற்கான தகுதி வரையறை குறித்து மார்ச் 3வது வாரத்தில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ellar - New Delhi,இந்தியா
08-ஜன-202209:43:52 IST Report Abuse
ellar ஏழை, கிராமப்புற மக்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு தேவை. ஜாதி வந்து எங்கும் உதவுவது இல்லை. அரசின் சர்டிபிகேட் மற்றும் அப்ளிகேஷன்களில் ஜாதியை நீக்கி பான் மற்றும் ஆதார் அடிப்படையில் வறுமை நிலை கோடிட்டு ஒரு 25 வருடம் ஒதுக்கீடு வழங்கினால் நாடு முன்னேறும். இல்லை என்றால் அரசியல் கட்சிகளும் அவர்கள் குடும்பங்களும் தான் முன்னேறும். திமுக ஒன்றும் சமூக நீதியை என்றுமே வழங்காது. இன்று அவர்கள் எண்ணம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டுள்ளது. ஆனால் தவறான அறிக்கை விட்டு மக்களை குழப்பும் நிலை தான் என்றும் தொடரும்.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
07-ஜன-202218:18:07 IST Report Abuse
r ravichandran SC ST MBC OBC இட ஒதுக்கீடுகள் மூலம் அரசு பணியில் இட ஒதுக்கீடு பெற்ற ஒருவரின் மகனுக்கு அல்லது மகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க கூடாது. அந்த இட ஒதுக்கீடு அதே SC ST OBC , MBC பிரிவில் இதுவரை இட ஒதுக்கீடு பெறாத மற்றொரு குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். இப்படி செய்தால்தான் இந்த இட ஒதுக்கீடுகள் பலன் நியாயமாக அனைவருக்கும் போய் சேரும், இல்லாவிட்டால் IAS, IPS போன்ற பெரிய பதவிகளை இட ஒதுக்கீடுகள் மூலம் பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் தங்களது அதிகாரம், பண பலத்தை கொண்டு அவர்களது வாரிசுகளுக்கு மட்டும் பெற்று தந்து விடுவார்கள். இதனால் இட ஒதுகிட்டின் சமபலனை அதே வகுப்புகளில் உள்ள மற்றவர்கள் இழக்க நேரிடும்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
07-ஜன-202217:28:26 IST Report Abuse
சீனி ஏழை ஏழையாதான் இருக்கான். அரசு கோட்டா என்பதே கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே என்ற சட்டம் வரவேண்டும். தற்போதய சூழ்னிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் அரசுப்பணியில் இருப்பது தான் கோட்டா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X