திமுக.,வினர் குற்றம் செய்தால் சட்டம் பாயும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 07, 2022 | கருத்துகள் (49)
Advertisement
சென்னை: தி.மு.க.,வினர் தவறு செய்தாலும், சிறிய குற்றங்களில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கவர்னர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. கவர்னர் அறிக்கை என்பது அரசின் கொள்கை மற்றும் செயல்திட்ட அறிக்கை.
dmk, stalin, cmstalin, திமுக, தி.மு.க., ஸ்டாலின்,

சென்னை: தி.மு.க.,வினர் தவறு செய்தாலும், சிறிய குற்றங்களில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கவர்னர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. கவர்னர் அறிக்கை என்பது அரசின் கொள்கை மற்றும் செயல்திட்ட அறிக்கை. கவர்னரின் பாராட்டு உரை என்பது மக்களுக்கான பாராட்டு. அரசின் திட்டங்களை பாராட்டியதற்காக கவர்னருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கொரோனா மிரட்டல் காரணமாக 2 நாட்கள் கூட்டம் நடக்கிறது.நீட் தேர்வு போராட்டத்தில் அதிமுக ஆதரவு தரும் எனக்கூறியதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.1.62 லட்சம் ஹெக்டேர் பயிர் பாதிப்புக்கு 132.12 கோடி நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகள் வங்கிக்கணக்கில் இரண்டு நாளில் வரவு வைக்கப்படும். பருவமழை பாதிப்புகளில் இருந்து நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும். பெண்களுக்கான எதிரான குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டு வருகிறது. குழந்தை எதிரான குற்ற வழக்கு ஒன்றில் ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் 20 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. குழந்தைக்கு எதிரான குற்ற வழக்கு ஒன்றில் 82 நாட்களில் விசாரணை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


latest tamil news


அம்மா மினி கிளினிக், அம்மா உணவகத்தை மூடிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் கூறினார். இதுபோன்ற பட்டியல் எங்களிடம் நிறைய உள்ளது. ஓமந்தூராரில் அமைக்கப்பட்ட சட்டசபையை மருத்துவமனையாக மாற்றியது யார்? அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற முனைந்ததும், அதனை பாலடைய வைத்ததும் யார்? செம்மொழி பூங்காவை பராமரிக்காமல் விட்டது யார்?ராணிமேரி கல்லூரியில் கருணாநிதி பெயரை நீக்கியது யார்?உழவர் சந்தையை இழுத்து மூடியது யார்?சமத்துவபுரத்தை சீரழித்தது யார்? இப்படி வரிசையாக நீண்ட நேரம் என்னால் கேள்வி கேட்க முடியும். அதனால் நாங்கள் செய்தோம் என கூறவில்லை

தமிழக ஜெயலலலிதா கவின் பல்கலை இன்னும் அதே பெயரில் தான் உள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தை பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. அம்மா கிளினிக் என பெயர் வைத்தது இல்லை மருத்துவமனை இல்லை. அதிமுகஆட்சி காலத்தில் முந்தைய திமுக அரசின் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அம்மா உணவகம் தொடரும் என்பது எனது எண்ணம் அதே நிலைப்பாட்டில் உள்ளேன். அந்த முடிவில் மாற்றம் இல்லை. அதிமுக ஆட்சி திட்டங்களில் திமுக அரசின் திட்டங்களை புறக்கணித்த போன்று திமுக அரசு செயல்படாது. மக்களிடம் உண்மையாக இருந்தோம். அதனால், நன்மதிப்பை பெற்றோம்.

கோவிட்டை தடுப்பது தடுப்பூசி தான். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 8.09 சதவீதம் பேர் தான் முதல் டோஸ் போட்டனர் . 2வது டோஸ் 2.84 சதவீதம் தான் தடுப்பூசி போட்டனர். அடுத்த 7 மாதங்களில் ஆட்சிக்கு வந்த உடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடுவதை மக்கள் விழிப்புணர்வாக மாற்றினோம். 87சதவீத மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 62.25 சதவீத மக்கள் 2வது டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். 8.76 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளன. கொரோனாவை தடுக்கும் ஆயுதம் தடுப்பூசி தான். 15 --1 8 வயது சிறார்களுக்கு 3ம் தேதி தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முன்கள பணியாளர்களுக்கு கூடுதல் டோஸ் தடுப்பூசி போட நடவடிக்கை. ஒமைக்ரானை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உங்களை காக்கும் அரசாக மட்டுமல்லாமல் உயிர்காக்கும் அரசாகவும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

6 மாதங்களில் 75 சதவீத அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். மக்கள் இலவச பயணம், ஆவின் பால் குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட பல அறிவிபபுகளை நிறைவேற்றியுள்ளோம்.தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். இன்னுயிர் காப்போம் மூலம் 5274 பேர் பயனடைந்துள்ளனர்.

மழை வெள்ளம் குறித்து பேச அதிமுகவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.கோடநாடு கொலை கொள்ளை, பொள்ளாச்சி பலாத்காரம், குட்கா விவகாரத்தில் முத்திரை பதித்தவர்கள் அதிமுகவினர். இதனை மக்கள் மறக்க மாட்டார்கள். குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர் தங்களது கைகளில் குறை உள்ளதா என பார்த்து பேச வேண்டும். நமது வழக்குகளில் எந்த குற்றவாளியையும் தப்பி சென்றனரா.தப்பி சென்ற குற்றவாளியையும் 5ம் தேதி கைது செய்யப்பட்டார்.தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. திமுக.,வினர் சிறிய குற்றங்கள் செய்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன். இது உறுதியாக தெரிவிக்கிறேன்.

தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளும் விரைவில் மேம்படுத்தப்படும். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
10-ஜன-202208:54:27 IST Report Abuse
Jit Onet அப்போ உடஞ்சநிதிய உள்ள தள்ளுங்க மொதல்ல
Rate this:
Cancel
08-ஜன-202205:32:41 IST Report Abuse
Raja 🇮🇳raja🇮🇳 than அப்போ பாதி பேர் ஜெயிலில் தான் இருக்கனும்.அறிக்கை நல்லா இருக்கு முதல்வரே செயல்படுத்தனுமே.இதுவும் கண்துடைப்பு தான்.வாழ்க தமிழகம்.
Rate this:
Cancel
santhanam - Chennai,இந்தியா
07-ஜன-202221:19:33 IST Report Abuse
santhanam வேண்டாம் வெளி வேஷம் .தி மு க தொண்டர்கள் என்று தவறு செய்யாத தேவர்கள் .மாற்ற எல்லோரும் தவறு செய்யும் அசுரர்கள் சரிதானே திரு ஸ்டாலின் அவர்களே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X