பாதுகாப்பு விதிமீறல்: பிரதமர் பயண ஆவணத்தை பாதுகாக்க உத்தரவு

Updated : ஜன 07, 2022 | Added : ஜன 07, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
புதுடில்லி: பஞ்சாபில் பிரதமருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பான வழக்கில், பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.பிரதமர் மோடி கடந்த ஜன.,5ம் தேதி பஞ்சாப் சென்றிருந்தபோது, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது
Supreme Court, PMModi, Security, Travel Documents, Secure, Registrar, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், பிரதமர் மோடி, பாதுகாப்பு, மீறல்

புதுடில்லி: பஞ்சாபில் பிரதமருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பான வழக்கில், பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஜன.,5ம் தேதி பஞ்சாப் சென்றிருந்தபோது, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரா்கள் சிலா் சாலையை மறித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களால் சுமார் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் மேம்பாலத்திலேயே நின்றிருந்தது. பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜன.,7) விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அப்போது, பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து உச்ச நீதிபதிகள், ‛பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல், அனைத்து பயண பதிவுகளையும் தனது பாதுகாப்பில் வைத்திருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். மேலும் பஞ்சாப் காவல்துறை, சிறப்பு பாதுகாப்பு குழு (என்பிஜி) மற்றும் பிற மத்திய மற்றும் மாநில அமைப்புகள் அவருக்கு ஒத்துழைத்து மற்றும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும்,' என தெரிவித்தனர்.


latest tamil news


மத்திய அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‛இச்சம்பவம் பிரதமரின் பாதுகாப்புக்கு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியது. பிரதமரின் பஞ்சாப் பயண மற்றும் பாதுகாப்பு ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட வேண்டும். பஞ்சாப் அரசும், காவல்துறையும்தான் பாதுகாப்புக் குறைபாட்டிற்குக் காரணம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நடக்க வாய்ப்புள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, இது சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil Kumar - chennai,இந்தியா
07-ஜன-202218:01:37 IST Report Abuse
Senthil Kumar ஹா ஹா மஸ்தான் வேலைய காட்ட தொடங்கிவிட்டார் நாடகம் ஆரம்பம் பஞ்சோப் இன்னும் என்ன என்ன கம்பிக்கட்டுர வேலை நடக்கபோகுது பொறுத்து இருந்து பாக்கணும்
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
07-ஜன-202216:26:18 IST Report Abuse
G.Prabakaran ப்ளூ புக் எனும் நீல புத்தகம் VIP Convoy பாதுகாப்பு புத்தகத்தின் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தால் எல்லா உண்மையும் வெளிச்சத்திற்கு வந்து விடும் குறிப்பாக ஜனாதிபதி பிரதமர் போன்றோருக்கான போக்குவரத்து பாதுகாப்பிற்கு SPG எனப்படும் கமாண்டோ படைத்தான் முழு பொறுப்பு. ஆகவே பிரதமரின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு SPG எனும் பூனை பாதுகாப்பு படையினர் தான் முழு பொறுப்பு. பிரதமருக்கு அவரின் பாதுகாப்பு படையினரை கட்டுப்படுத்த தவறினால் அவர் எப்படி இந்த நாட்டின் காவல் காரர் என சொல்லிக் கொள்ள முடியும்.
Rate this:
பேசும் தமிழன்ஆனால் பஞ்சாப்பில் ஆட்சியில் இருப்பவர்... இத்தாலி கும்பல் மூலம் நியமனம் செய்யப்பட்ட சன்னி.... அவர் தான் இந்த குளறுபடி க்கு பொறுப்பு ஏற்க வேண்டும்... கூடவே இத்தாலி குடும்பம்.... கலவரம் செய்த கும்பலை விரட்ட விடாமல்... போலீஸ் கைகளை கட்டி போட்ட பெரிய கை எது???...
Rate this:
பேசும் தமிழன்Please don't repeat the same comment...
Rate this:
பேசும் தமிழன்Please don't repeat the same comment...
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
07-ஜன-202216:26:16 IST Report Abuse
John Miller இனி மோடியை இந்தியாவில் பார்க்க முடியாது. வெளிநாட்டு சுற்றுலா ஆரம்பித்து விடுவார்.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
07-ஜன-202221:52:56 IST Report Abuse
vadiveluலால்பகதூர் சாஸ்திரி வெளி நாட்டில்தான் கூலிகளால் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X