அனுமதியின்றி 'பார்'; ஊழியர்களுக்கு சிறை; 'பார்' உரிமையாளர்கள் அதிர்ச்சி

Added : ஜன 07, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அனுமதியின்றி 'பார்' நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட, 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவிநாசி போலீசார் நடத்திய ரெய்டில், அவிநாசி கால்நடை மருத்துவமனை அருகே உள்ள 'டாஸ்மாக்' கடையருகே அனுமதியின்றி செயல்பட்ட பாரில் பணியாற்றி வந்த முத்துராமலிங்கம் 35, கணணி ரவுண்டானா அருகேயுள்ள 'டாஸ்மாக்' கடை ஒட்டியுள்ள பாரில் பணியாற்றி வந்த

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அனுமதியின்றி 'பார்' நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட, 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவிநாசி போலீசார் நடத்திய ரெய்டில், அவிநாசி கால்நடை மருத்துவமனை அருகே உள்ள 'டாஸ்மாக்' கடையருகே அனுமதியின்றி செயல்பட்ட பாரில் பணியாற்றி வந்த முத்துராமலிங்கம் 35, கணணி ரவுண்டானா அருகேயுள்ள 'டாஸ்மாக்' கடை ஒட்டியுள்ள பாரில் பணியாற்றி வந்த வீரபாண்டி, 34, ரங்கா நகர் 'டாஸ்மாக்' கடை அருகே உள்ள பாரில் பணியாற்றி வந்த பாலாஜி, 22 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுநாள் வரை இவ்வாறு கைது செய்யப்படும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் வெளியே விடப்படுவர். ஆனால், இம்முறை கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது, டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
07-ஜன-202218:47:28 IST Report Abuse
Somiah M அனுமதி இன்றி பாரில் வேலை செய்தவர்களை தண்டித்தது சரியானதே .அதே நேரத்தில் அனுமதி இன்றி பார் நடத்தியவர்கள் தண்டிக்கப் பட்டனரா ?அவர்கள்தானே முதலில் தண்டிக்கப் படவேண்டும் .
Rate this:
Cancel
NARAYANAN.V - coimbatore,இந்தியா
07-ஜன-202217:29:03 IST Report Abuse
NARAYANAN.V காவல்துறையினரும் ஒவ்வொரு முறையும் கையூட்டு வாங்கிக்கொண்டு,மாமூல் வாங்கிக்கொண்டு,நாங்கள் அடிக்கிற மாதிரி அடிக்கிறோம்,நீ அழுகிறமாதிரி அழு என்ற போக்கில் விதி மீறலுக்குக் கேஸைப் போட்டுவிட்டு ஜாமீனிலும் விட்டிருப்பார்கள்.இப்போது அவர்களுக்கு என்ன நிர்பந்தமோ? இல்லை இவர்களுக்கு எத்தனை தடவை வார்னிங் செய்தாலும் திருந்துவதில்லை என்று சொல்லி படிப்பினையைக் கொடுப்போம் என்று சொல்லி ஜெயிலில் அடைத்திருக்கலாம்.எது எப்படியோ நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் காவல்துறை என்ற ஒரு சோளக்காட்டுப் பொம்மை என்ற ஒன்று இருக்கிறது என்று நிரூபித்துவிட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X