சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கூட்டு களவாணிகள் தான்!

Added : ஜன 07, 2022 | கருத்துகள் (1)
Advertisement
கூட்டு களவாணிகள் தான்!எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட நான்கு மாடி குடியிருப்பு கட்டடம், சமீபத்தில் இடிந்து விழுந்தது. இக்கட்டடத்தில், 1999ல் தான் பயனாளிகள் குடியமர்த்தப்பட்டனர். அக்கட்டடத்தின் ஆயுள், 25 ஆண்டுகள் கூட இல்லை!இது போன்று தி.மு.க., மற்றும்


கூட்டு களவாணிகள் தான்!


எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட நான்கு மாடி குடியிருப்பு கட்டடம், சமீபத்தில் இடிந்து விழுந்தது. இக்கட்டடத்தில், 1999ல் தான் பயனாளிகள் குடியமர்த்தப்பட்டனர். அக்கட்டடத்தின் ஆயுள்,
25 ஆண்டுகள் கூட இல்லை!இது போன்று தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட பல கட்டடங்கள் இடிந்துள்ளன; இடிந்து விழ தயாராக உள்ளன.மக்களின் பல லட்சம் கோடி ரூபாய் வரிப்பணம் வீணாகிறது. இதற்கு, இரு திராவிட கட்சிகள் தான் முழு பொறுப்பு.குடிசையில் பயமின்றி, நிம்மதியாக வாழ்ந்த மக்களை, 'குடிசை மாற்று வாரியத்தில் வீடு தருகிறோம்' என அழைத்துச் சென்று, அவர்களின் உயிர் பணயம் வைக்கப்படுகிறது.
தரமில்லாத கட்டடத்திற்கும், அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதற்கும், ஊழல் மட்டும் தான் காரணம்.அரசியல் கட்சியினரும், அதிகாரிகளும் தங்களது மனச்சாட்சியை குழிதோண்டி புதைத்து விட்டனர். சினிமா, 'செட்டிங்' வீடுகளை விட, பலவீனமான கட்டடத்தை கட்டி, அங்கு மக்களை
குடியமர்த்துகின்றனர்.'கட்டடம் இடிந்து மக்கள் இறந்தால் நிதியுதவி அளித்தால் போதும்' என்ற அரசின் எண்ணம் தானே அதற்கு காரணம்.நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர் கூட, இப்படி தரமில்லாத கட்டடங்களை கட்டவில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் கட்டிய முல்லை பெரியாறு அணை, 'ரிப்பன் பில்டிங்' மற்றும் பாலங்கள் அனைத்தும், இன்றும் நிலைத்து
நிற்கின்றன.ஆனால், நம்மை ஆள நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் தான், 'கமிஷன்' பெறுவதற்காக, தரமில்லாத கட்டடங்களை கட்டுகின்றனர்.ஆங்கிலேயருக்கு நம் மீது இருந்த அக்கறை, இந்த திராவிட கட்சிகளுக்கு இல்லையே!இரு கழகங்களும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பதில் சந்தேகமே இல்லை.அதற்கு உதாரணம், முன்பு அ.தி.மு.க.,வில் இருந்த முக்கிய பிரமுகர்களில் எட்டு பேர், இன்று தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக உள்ளனர் என்பது தான்.
ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தியே, ஆட்சி அதிகாரத்தை இரு கழகங்களும் மாறி மாறி அனுபவித்து வருகின்றன. உண்மையில் இரு கழகங்களும், கூட்டு களவாணிகள் தான்!


இதற்கும்ஒரு குழு அமைக்கலாமா?க.சீனிவாசன், கடையம், தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ ஆட்சியில் அமரும் போதெல்லாம் எதைச் செய்கிறதோ இல்லையோ, கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்யும் முயற்சியில் முழு மூச்சாய் இறங்கும். இப்போதும், தி.மு.க., அரசு அப்படித் தான் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் காங்., ஆட்சியில் இருந்தது வரை, இது போன்ற முன்கூட்டியே விடுதலை என்ற பேச்சே எழுந்ததில்லை.முன் கூட்டியே விடுதலை என்பது, நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும், இந்திய குற்றவியல் சட்ட விதிமுறைகளையும் அவமதிக்கும் செயலாகும்.பேசாமல் இப்படி செய்யலாம்...போலீசார் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கும் குற்றவாளியிடம், நீதிமன்ற விசாரணையின் போது குற்றம் எப்படி, எங்கே, எவ்வாறு நிகழ்ந்தது என்று மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும்; மற்றபடி அபராதமோ, சிறை தண்டனையோ, மரண தண்டனையோ விதிக்கக் கூடாது.
அந்த குற்றவாளியை மன்னித்து, அடுத்த குற்றச் செயலில் ஈடுபட அனுமதி அளித்து வழியனுப்பி வைக்க வேண்டும் என்று, சட்டசபையில் ஒரு தீர்மானம் போட்டு விடலாம். 'ஆயுள் தண்டனை கைதிகளை, முன் கூட்டியே விடுவிப்பது குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
'கழக உடன்பிறப்புகள்' மற்றும் ஆதரவு அமைப்பினர் குற்றச் செயலில் ஈடுபடுவதையே பிழைப்பாக வைத்திருப்பதால், அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வைக்க, இது போன்ற முயற்சியில் தி.மு.க., அரசு மும்முரமாக உள்ளதோ?சரி... குற்றவாளிகளின் தண்டனை காலம் முடிவதற்குள், அவர்களை விடுதலை செய்ய ஆர்வமாக இருக்கும், தி.மு.க., அரசுக்கு ஒரு கேள்வி...சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கலாம். ஆனால் அந்த ஆட்சியை, அதற்கு முன், 'டிஸ்மிஸ்' செய்து வழியனுப்பி வைக்க, மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்தால், தி.மு.க., ஏற்றுக்
கொள்ளுமா?


வேடந்தாங்கல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி!முனைவர் சு.பால்ராஜ், பணி நிறைவு பெற்ற வனஉயிரினக் காப்பாளர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பரப்பளவை குறைக்க, கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டத்தை வாபஸ் பெற, வனத்துறை முடிவு செய்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், 300 ஆண்டுகள் பாரம்பரிய சிறப்புமிக்கது. 73 ஏக்கர் வேடந்தாங்கல் ஏரியை அடிப்படையாக வைத்து, 5 கி.மீ., சுற்றுக்கு விரிவுப்படுத்தி, 1998ல் அரசு ஆணை வெளியிடப்பட்டது.
தமிழக வனத்துறை, 2020ல் ஒரு வரைவு திட்டத்தை தயாரித்தது. அதில், சரணாலயத்தின் சுற்றளவை, 3 கி.மீ.,யாக குறைத்து, எஞ்சிய 2 கி.மீ., சுற்றளவை சூழல் முக்கியத்துவ பகுதியாக அறிவிக்க முடிவு செய்தது.கடந்த, 1998ல் விரிவுப்படுத்தப்பட்ட சுற்றளவு, ஒரு கற்பனையான எல்லையாகவே உள்ளது. இதற்குரிய எல்லை கற்கள் ஏதும் கிடையாது.இந்நிலையில் ஒரு சரணாலயத்திற்குரிய பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை எவ்வாறு தொடர முடியும்?நம் நாட்டில் எந்த ஒரு சரணாலயமும், அதன் சுற்று எல்லைக் கற்கள் இல்லாமலும், முழு பரப்பை தெளிவுப்படுத்தாமலும், தனியார் நிலத்தை உள்ளடக்கியதாகவும் இருப்பதாகவும் தெரியவில்லை.
சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல், தனியார் நிலத்தை சரணாலயப் பகுதியாக மாற்றியது, பல்வேறு சிக்கல்களை உருவாக்கியுள்ளது.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு மறு நிலவரையறை செய்து, எல்லை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-ஜன-202219:36:23 IST Report Abuse
D.Ambujavalli இவர் போவார் , அவர் வருவார், அவர் போவார் இவர் வருவார் இதுதான் ஆட்சி முறை மாற்றம் ஒவ்வொரு கட்சிக்கும் மாறி மாறி 'விடியல்' வரும் மக்களுக்கும் மாநிலத்துக்கும் மாறாத இருள் சூழும் இதற்கு முடிவே கிடையாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X