சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 07, 2022 | கருத்துகள் (1)
Advertisement
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: பஞ்சாபில் துணிந்து களமாடிய பெருமக்கள்; பணிந்து பின்வாங்கினார் பிரதமர்; பாடம் புகட்டியது பஞ்சாப்; துணிந்தால் பறக்கும் அம்மியும் பஞ்சாய்!என்னவொரு மகிழ்ச்சி... இதைத் தான் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தீர்கள்; பஞ்சாபில் நடந்து விட்டது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என நீங்கள் கவலைப்படுவதாக



பேச்சு, பேட்டி, அறிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: பஞ்சாபில் துணிந்து களமாடிய பெருமக்கள்; பணிந்து பின்வாங்கினார் பிரதமர்; பாடம் புகட்டியது பஞ்சாப்; துணிந்தால் பறக்கும் அம்மியும் பஞ்சாய்!என்னவொரு மகிழ்ச்சி... இதைத் தான் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தீர்கள்; பஞ்சாபில் நடந்து விட்டது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என நீங்கள் கவலைப்படுவதாக தெரியவில்லையே!


புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை
: பஞ்சாபில் பிரதமர் மோடியை, பொது நிகழ்ச்சியில் பங்கேற்க விடாமல் தடுத்த விவகாரத்தில், மாநில காங்., அரசு உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.அரசியல் காரணங்களுக்காக இந்த நிகழ்வு நடந்தது என்றால், இதை அனுமதித்தது நாட்டுக்கே தலைகுனிவாகவே அமையும்!


தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
10 கோடி விவசாயிகளுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒரே நிமிடத்தில், சத்தமின்றி,- கமிஷனின்றி, கடந்த 1ல் பிரதமர் மோடி வழங்கினார். ஆனால், 90 லட்சம் ரேஷன்தாரர்களுக்கு, தி.மு.க., பிரமுகர்கள் வரும் வரை, பொதுமக்களை கால்கடுக்க காக்க வைத்து, பொங்கல் பொருட்கள் வழங்கியது, தி.மு.க., அரசு.அதுபோல, 21 பொருட்கள் கொடுக்கப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால், பையுடன் சேர்த்து, 17 பொருட்கள் தான் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. மோடி வழங்கியது போல, அவரவர் வங்கிக் கணக்கில், இதை பணமாக கொடுத்திருக்கலாமே!


நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
: தமிழகத்தில் சமீபகாலமாக, 'ஆன்லைன்' சூதாட்டம் அதிகரித்து, உயிர்பலியும் உயர்ந்து வருகிறது. எனவே, இந்த சூதாட்டத்தை தடை செய்ய வலுவான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.வலுவான சட்டம் மட்டும் போதாது... சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மனநிலையை மாற்றவும் அரசு முயற்சிக்க வேண்டும்!


ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் அறிக்கை
: போகி, காணும் பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வருகின்றன. மேலும், முருகனின் அறுபடை வீடுகளுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், திடீரென அரசு, மூன்று நாட்கள் கோவில் திறப்புக்கு தடை என்று அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.கொரோனா கெடுபிடிகள் பொங்கல் கொண்டாட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமே என கவலை தெரிவிக்கிறீர்கள். சமூக இடைவெளி, முக கவசத்துடன் கொண்டாடினால், பிரச்னை இருக்காதோ?

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
08-ஜன-202213:10:52 IST Report Abuse
raja "மோடி வழங்கியது போல, அவரவர் வங்கிக் கணக்கில், இதை பணமாக கொடுத்திருக்கலாமே" ... அப்புறம் உடன்பிறப்புகள் எப்படி புறங்கை நக்குவானுவோ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X