தேர்தல் ஆணையத்திடம் அரசு கூறியது என்ன?

Added : ஜன 07, 2022 | |
Advertisement
புதுடில்லி:'தேர்தல் நடக்கும் மாநிலங்களில் 'ஒமைக்ரான்' பரவலை நினைத்து அச்சப்பட வேண்டியதில்லை' என, தேர்தல் ஆணையத்திடம் கூறியதாக வெளியான தகவலை மத்திய சுகாதாரத் துறை மறுத்துள்ளது.நம் நாட்டில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூரில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க

புதுடில்லி:'தேர்தல் நடக்கும் மாநிலங்களில் 'ஒமைக்ரான்' பரவலை நினைத்து அச்சப்பட வேண்டியதில்லை' என, தேர்தல் ஆணையத்திடம் கூறியதாக வெளியான தகவலை மத்திய சுகாதாரத் துறை மறுத்துள்ளது.
நம் நாட்டில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூரில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன.அதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே தேர்தல் நடக்கும் மாநிலங்களில் ஒமைக்ரானால் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதால், கவலைப்பட வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்ததாக தகவல்கள்

வெளியாகின.இதை மத்திய சுகாதாரத் துறை நேற்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:தேர்தல் ஆணைய அதிகாரிகளை மத்திய சுகாதாரத் துறை செயலர் சந்தித்தபோது, நாடு முழுதும் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.தேர்தல் நடக்கும் மாநிலங்கள் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் எடுக்கப்

படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.எனினும் தேர்தலை சந்திக்கும் மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் குறைவாக இருப்பதாகவும், அதனால் அச்சப்பட வேண்டாம் என்றும் மத்திய சுகாதாரத் துறை எதுவும் தெரிவிக்கவில்லை; அது தவறான தகவல்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.:

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X