உடற்பயிற்சி, உணவு மூலம் உடலை, 'பிட்'டாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து கூறுகிறார் தமிழக, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்: நான் சார்ந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, தற்காப்பு கலைகள்ன்னு சொல்லக்கூடிய அடிமுறை இங்கு பிரபலம்; அதை, களரின்னும் சொல்வாங்க.வாள், கத்தி, வெட்டுக்கத்தி, கம்பு, குறுந்தடி, நெடுந்தடின்னு பல கலைகள் உண்டு. எங்க ஊரில் அதை, 'சிரமம்' என்பர்; வேறு இடங்களில், 'சிலம்பம்' என்பர். அது படிப்பதற்கே சிரமம் என்பதால் அதை, சிரமக்கலைன்னு சொன்னாங்க. சிரமக் கம்பு கலையை, ஆசான்களுடன் சேர்ந்து படித்தேன்.சிரமக்கலையை படிக்கிறதை விட, விளையாடுவது ரொம்ப சிரமம்; நிறைய வர்ம அடிப்படைகள் அதில் வரும்.பயிற்சி செய்யும்போது நாம் தடுக்க தவறி விட்டால், வர்ம, 'பாயின்டு'களில் அடிபட வாய்ப்பு அதிகம். அதுபோல, 'காட்டா குஸ்தி'ன்னு ஒரு கலை உண்டு. குத்துச்சண்டை மாதிரியே இருக்கும். குஸ்தி பயில்வான்கள் தான் அதற்கு ஆசான்களாக இருப்பர்.'பூட்டு பிரிவு'ன்னு, ஆட்களை, 'லாக்' பண்ணும் அடிமுறைகள், எறிகள் என்ற பாரம்பரிய கலைகளும் உண்டு. இப்படி எக்கச்சக்கமான உட்பிரிவுகளை கொண்டது, நம் மண்ணின் கலை.அதுபோல, செவுடு, ஒழிவு முறைகள் என பல கலைகள் இருக்கின்றன. வாள் சண்டை எல்லாம் அற்புதமான கலைகள். கம்பு வைத்து பல அடி முறைகள் இருக்கின்றன. இதெல்லாம் தற்காப்புக் கலைகளாகவும், போர்ப் பயிற்சிகளாகவும் பயன்பட்டிருக்கின்றன.என்னை பொறுத்தவரை, என்னிடம் உணவுக் கட்டுப்பாடு எதுவும் இல்லை; எல்லா உணவுமே சரிசமமாக எடுப்பேன்.சிலர், தினசரி இவ்வளவு, 'கலோரி' எடுத்துக் கொள்ள வேண்டும் என கணக்குப் பார்த்து சாப்பிடுவர். என்னைப் பொறுத்தவரை அது தவறானது.ஆட்டின் உடம்பில் நிறைய கொழுப்பு இருக்கும். ஆனால், ஆடு எந்தக் கொழுப்பும் சாப்பிடாது; வெறும் புல் தான் சாப்பிடும்.பூனை, புலி ஆகியவை இறைச்சி சாப்பிடும்; அவற்றின் உடலில் கொழுப்பு குறைவாகவே இருக்கும். இது, இறைவன் படைப்பின் ரகசியம்.எந்த உணவாக இருந்தாலும் அதை அதிகமாக சாப்பிடக் கூடாது; தேவைக்கு சாப்பிடுவதில் தவறு கிடையாது.மனித உடலுக்கு, 'புரோட்டின், கார்போஹைட்ரேட்' மற்றும் கொழுப்பு போன்ற பலவும் தேவை.நான் நிறைய, 'நான்வெஜ்' சாப்பிடுவேன்; 'வெஜிடேரியன்' சாப்பாடு ரொம்ப கம்மியாக தான் சாப்பிடுவேன். அதனால், இது தான் சாப்பிடணும், இப்படித் தான் சாப்பிடணும்னு சொல்வதில் உடன்பாடு இல்லை.கன்னியாகுமரியில, 'கட்டன் சாயா'ன்னு சொல்லக்கூடிய, தேயிலையை கொதிக்க வச்சு அந்த தண்ணீரை அடிக்கடி குடிப்பேன். கட்டன் சாயாவில் இஞ்சி, புதினா போட்டு குடித்தால் அமர்க்களமாக இருக்கும்.இப்படி இருப்பதால், இறைவன் அருளால் எனக்கு இதுவரை மருத்துவ உதவிகள் தேவைப்படலை!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE