மருத்துவ படிப்பில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும்!

Updated : ஜன 09, 2022 | Added : ஜன 07, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
புதுடில்லி : 'மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்' என, நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு அனுமதி அளிக்கும் இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தது. 'இது தொடர்பான வருமான வரையறை குறித்து
மருத்துவ படிப்பு, இடஒதுக்கீடு , செல்லும்!

புதுடில்லி : 'மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்' என, நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு அனுமதி அளிக்கும் இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தது. 'இது தொடர்பான வருமான வரையறை குறித்து மார்ச்சில் விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.மருத்துவ பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி., வகுப்பினருக்கு 27 சதவீதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து, மத்திய அரசு கடந்தாண்டு அரசாணை வெளியிட்டது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதை எதிர்த்து சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த ஆண்டு அக்டோபரில் நடக்கவிருந்த முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தக் கோரி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து இரண்டு நாட்களாக விசாரித்தது.


அனுமதிஅனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ். போபண்ணா அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு:இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பற்றிய அறிவிப்பாணையும் செல்லும். அரசியல் சாசனத்தின்படி இந்த இட ஒதுக்கீடுகள் அனுமதிக்கத்தக்கது தான்.அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் மட்டும் கடைப்பிடித்து கலந்தாய்வை நடத்தலாம். இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான வரையறை குறித்து மார்ச் மூன்றாவது வாரத்தில் விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


சமூக நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்: ஸ்டாலின்இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:பல ஆண்டுகளாக அரசியல் களத்திலும், நீதிமன்றங்களிலும் தி.மு.க., நடத்திய இடைவிடாத போராட்டத்தின் விளைவாக இந்த 27 சதவீத இட ஒதுக்கீடு, இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது சமூக நீதியைப் பற்றிய புரிதலும், ஆழமான பற்றுதலும் உடைய தி.மு.க.,விற்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி. சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல். தி.மு.க.,வும், சமூக நீதியின்பால் பற்று உடைய இயக்கங்களும் நடத்திய போராட்டம், இந்தியா முழுதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை பெற்றுத் தந்துள்ளது. மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வர, தமிழகம் ஆற்றிய பங்களிப்புக்கு ஈடானது இந்த வெற்றி. மிகுந்த மனநிறைவோடு இந்த போராட்டத்தில் துணைநின்று பங்களித்த அனைவருக்கும் என் வாழ்த்துகள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
08-ஜன-202217:48:32 IST Report Abuse
GMM இட ஒதுக்கீடு நீக்க தான் 'நீட்' தேர்வு. மீண்டும் இட ஒதுக்கீடு முறை எதற்கு? சில பிரிவு மக்கள் 70 ஆண்டுக்கு மேல் இட ஒதுக்கீடு கொடுத்தும் முன்னேறவில்லை. இனியும் முன்னேற போவது இல்லை. குடும்ப கட்டுப்பாடு இல்லை. குற்ற பழக்கம் பண விரயம் அதிகம். தனி மனித வாழ்வை அறிய முடியாது. இட ஒதுக்கீடு அரசியல் மூலம் ஆதிக்க முறையை வளர்க்கும். சுழற்சி முறையில் இல்லை. சாதி / மத அடிப்படையில் தரவு கேட்க வேண்டும். சுதந்திரம் பின் மொத்த இடம் (அரசியல் பதவி) கல்வி, வேலையில் ஒரு சாதியினர் இட ஒதுக்கீடு மூலம் பெற்ற மொத்த இடம் விவரம் தேவை. Thumbs rules கொண்டு எடுக்கும் முடிவு தீர்வு தராது. எந்த புள்ளி விவரங்கள் இல்லாமல் விசாரணை கட்ட பஞ்சாயத்தை நோக்கி செல்லும். மத்திய அரசு மனு தவறானது. நீதிமன்ற உத்தரவு நியாயம் இல்லாதது. நான் OBC. (என் சாதியில் முன்பு மது பழக்கம், மறுமணம் சூது, இல்லை) ஒருவர் கூட சுதந்திரம் பெற்ற பின் அமைச்சர் பதவி, அரசு அதிகார உயர் பதவியில் ( IAS, IPS..) இல்லை. ஏதாவது ஒரு வரி செலுத்துவர். வாக்கு வங்கி இல்லை. இன்று சில சமூகம் அரசியல் மூலம் சிதைக்க பட்டு வருகிறது.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
08-ஜன-202213:34:56 IST Report Abuse
M S RAGHUNATHAN நேற்று ஒரு நீதி மன்ற செய்தி பார்த்தேன். அதில் ஓர் கீழ் கோர்ட் நீதிபதி ஒரு சிலை கடத்தல் வழக்கில் கடத்தப்பட்டு, பின்பு மீட்கப்பட்டு, கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கடவுள் சிலை கோர்ட் இல் ஆஜராக வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பித்து இருந்தார். மேல் முறையீட்டில் உயர் நீதி மன்றம் அந்த கீழமை நீதிமன்ற நீதிபதியை எந்த அடிப்படையில் ஆஜராக சம்மன் அனுப்பியது என்று கேட்டுள்ளார். கோயிலில் இருக்கும் சுவாமி.மைனர் என்ற அடிப்படை.விதி தெரியாத ஒருவர் நீதிபதி. நம் நீதி பரிபாலனதின் அருமை இது தான் இட ஒதுக்கீடு வாழ்க. கல்லூரியில் சேர்வதற்கும், வேலையில் சேருவதற்கும் நல்ல தகுதி. நமக்கு திறமையான நீதிபதி தேவை கிடையாது. அரைகுறை அறிவுள்ள நீதிபதிகள், மருத்துவர்கள், வக்கீல்கள், பொறியாளர்கள் போதும். நன்றாக முன்னேறி விடலாம்.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
08-ஜன-202213:10:35 IST Report Abuse
M S RAGHUNATHAN எப்போது உச்ச நீதி மன்றம் மற்றும் உயர் நீதி மன்றம், தரைப்படை, விமானப் படை, கடற் படை, RBI ஆகியவற்றில் இட ஒதுக்கீடு செய்யப்படும். சர்வதேச போட்டிகளில் விளையாட தேர்வு செய்யும் அணிகளிலும் இட ஒதுக்கீடு செய்யப் படவேண்டும் ஆனால் கட்சித் தலைமை பொறுப்புகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. வாரிசு மட்டுமே செல்லும். The court it seems is not bothered about excellence. Please note merit and excellence are different. If you want any proof look at the degradation in legal profession. Compromise on quality beyond anybody's imagination. Fittest example is HRCE DEPT. which has large number of legal graduates as EO and JCs and DCs. ( Whose knowledge of the HRCE Act was out in public ).
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X