திருப்பூர்:கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ., சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.திருப்பூர், கருவம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில், அபிஷேக், 23 என்பவர், வர்த்தக பிரிவில் பணிபுரிந்துவந்தார். கொரோனா பாதித்து, மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர், கடந்த 2021, மே 13ம் தேதி உயிரிழந்தார்.தொற்று பாதித்த நாளில், அபிஷேக் இ.எஸ்.ஐ.,ல் பதிவு செய்த உறுப்பினராக இருந்தார். இவருக்கு திருமணமாகாததால், பெற்றோருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க, இ.எஸ்.ஐ., கோவை சார் மண்டல துணை இயக்குனர் உத்தரவிட்டார்.திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கிளை மேலாளர் திலீப், அபிஷேக்கின் பெற்றோர் ஷிவண்ணா, ராஜம்மாவிடம் நிவாரண உதவித்தொகைக்கான ஆணை மற்றும் சான்றோர் அடையாள அட்டை மற்றும் இறுதிச் சடங்கிற்காக, 15 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.தனியார் நிறுவன துணை பொதுமேலாளர் மோகன்குமார், இ.எஸ்.ஐ., காசாளர் தேவராஜ் பங்கேற்றனர். அபிஷேக்கின் பெற்றோருக்கு, மாதாந்திர உதவித்தொகையாக, தினமும், 103.50 வீதம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.