அவிநாசி:நான்காண்டு இடைவெளிக்கு பின், மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டத்தில், பதிவுபெற்ற நுகர்வோர் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மின் நுகர்வோர் சார்ந்த பிரச்னைகளை அறிந்து, தீர்வு காணும் நோக்கில், மின் நுகர்வோருக்கான காலாண்டு கூட்டம்நடத்தப்படுவது வழக்கம். அந்தந்த மின்வாரிய கண்காணிப்பு பொறி யாளர் தலைமையில் நடத்தப்படும்.அடுத்த மாதம், முதல் தேதி, திருப்பூர் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் நடத்த, கோவை மண்டல தலைமை பொறியாளர் அழைப்புக்கடிதம் அனுப்பியுள்ளார். இது, நுகர்வோர் அமைப்பினர் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.திருமுருகன்பூண்டி, தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாட்ஷா கூறுகையில், ''நான்காண்டு இடைவெளிக்கு பின், தன்னார்வலர் அமைப்பினரை அழைத்து குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுவது, வரவேற்கதக்கது. பொதுமக்கள் அவரவர் பகுதியில் உள்ள மின்சார்ந்த பிரச்னைகளை, சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரும்பட்சத்தில், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE