ஊரடங்கு கட்டுப்பாடு அமலுக்கு வந்தது!

Added : ஜன 08, 2022 | |
Advertisement
திருப்பூர்:கொரோனா தொற்று 3 வது அலை தாக்கம் தமிழகத்தில் தலை காட்டத்துவங்கியுள்ளது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது.பள்ளிகளில் 9ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து
 ஊரடங்கு கட்டுப்பாடு அமலுக்கு வந்தது!

திருப்பூர்:கொரோனா தொற்று 3 வது அலை தாக்கம் தமிழகத்தில் தலை காட்டத்துவங்கியுள்ளது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது.பள்ளிகளில் 9ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து கல்லுாரிகளிலும் வகுப்புகள் நடைபெறவில்லை. இவற்றில் ஆசிரியர்கள், அலுவலர்கள் வழக்கம் போல் பணியாற்றினர்.அவ்வகையில் இரவு 10:00 மணிக்கு மேல் கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியன இயங்கவில்லை. மேலும், பகல் நேரம் இயங்கிய கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் சேர அனுமதிக்கப்படவில்லை.தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதி என்ற நிலையிலும், மிகக் குறைவான அளவு மட்டுமே ரசிகர் கூட்டம் இருந்தது. ஜிம், சலுான், மனமகிழ் மன்றம், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றிலும் கட்டுப்பாடு காரணமாக கூட்டம் இல்லாத நிலை இருந்தது.கண்காணிப்பு தீவிரம்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் நேற்று முதல் மீண்டும் துவங்கிய நிலையில், கடந்த சில மாதங்களாக சுகாதார துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையான வழிகாட்டு விதிமுறைகள் குறித்த கண்காணிப்பு மீண்டும் முழு வீச்சில் துவங்கியது.முக கவசம் அணிதல், சமூக இடைெவளி பின்பற்றுதல், சானிடைசர் பயன்பாடு ஆகியன தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.இது போன்ற விதிமுறைகளை மீறிய கடைகள், தனி நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X