இது உங்கள் இடம்: கூட்டு களவாணிகள் தான்!

Updated : ஜன 08, 2022 | Added : ஜன 08, 2022 | கருத்துகள் (47)
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் திமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட நான்கு மாடி குடியிருப்பு கட்டடம், சமீபத்தில் இடிந்து விழுந்தது. இக்கட்டடத்தில், 1999ல் தான் பயனாளிகள் குடியமர்த்தப்பட்டனர். அக்கட்டடத்தின்
இது உங்கள், இடம், கூட்டு களவாணிகள், தி.மு.க., அதிமுக.,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் திமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:


சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட நான்கு மாடி குடியிருப்பு கட்டடம், சமீபத்தில் இடிந்து விழுந்தது. இக்கட்டடத்தில், 1999ல் தான் பயனாளிகள் குடியமர்த்தப்பட்டனர். அக்கட்டடத்தின் ஆயுள், 25 ஆண்டுகள் கூட இல்லை!இது போன்று தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட பல கட்டடங்கள் இடிந்துள்ளன; இடிந்து விழ தயாராக உள்ளன.மக்களின் பல லட்சம் கோடி ரூபாய் வரிப்பணம் வீணாகிறது.


இதற்கு, இரு திராவிட கட்சிகள் தான் முழு பொறுப்பு.குடிசையில் பயமின்றி, நிம்மதியாக வாழ்ந்த மக்களை, 'குடிசை மாற்று வாரியத்தில் வீடு தருகிறோம்' என அழைத்துச் சென்று, அவர்களின் உயிர் பணயம் வைக்கப்படுகிறது.தரமில்லாத கட்டடத்திற்கும், அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதற்கும், ஊழல் மட்டும் தான் காரணம்.அரசியல் கட்சியினரும், அதிகாரிகளும் தங்களது மனச்சாட்சியை குழிதோண்டி புதைத்து விட்டனர். சினிமா, 'செட்டிங்' வீடுகளை விட, பலவீனமான கட்டடத்தை கட்டி, அங்கு மக்களை குடியமர்த்துகின்றனர்.'கட்டடம் இடிந்து மக்கள் இறந்தால் நிதியுதவி அளித்தால் போதும்' என்ற அரசின் எண்ணம் தானே அதற்கு காரணம்.


latest tamil newsநம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர் கூட, இப்படி தரமில்லாத கட்டடங்களை கட்டவில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் கட்டிய முல்லை பெரியாறு அணை, 'ரிப்பன் பில்டிங்' மற்றும் பாலங்கள் அனைத்தும், இன்றும் நிலைத்து நிற்கின்றன.ஆனால், நம்மை ஆள நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் தான், 'கமிஷன்' பெறுவதற்காக, தரமில்லாத கட்டடங்களை கட்டுகின்றனர்.

ஆங்கிலேயருக்கு நம் மீது இருந்த அக்கறை, இந்த திராவிட கட்சிகளுக்கு இல்லையே!இரு கழகங்களும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பதில் சந்தேகமே இல்லை.அதற்கு உதாரணம், முன்பு அ.தி.மு.க.,வில் இருந்த முக்கிய பிரமுகர்களில் எட்டு பேர், இன்று தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக உள்ளனர் என்பது தான்.ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தியே, ஆட்சி அதிகாரத்தை இரு கழகங்களும் மாறி மாறி அனுபவித்து வருகின்றன. உண்மையில் இரு கழகங்களும், கூட்டு களவாணிகள் தான்!

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-ஜன-202200:47:20 IST Report Abuse
DARMHAR இந்த அழுகிப்போன மட்டைகளின் நாத்தம் சகிக்க முடியவில்லையே சாமீ
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
09-ஜன-202209:59:45 IST Report Abuse
VIDHURANஇருக்கட்டுமே இந்த அழுகிய நிலைக்கு யார் காரணம்? இவர்களுக்கு மாற்றி மாற்றி வோட்டு போட்ட மக்களாகிய நாம் தானே? இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நமக்கு எப்போது புரியும்?. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புதிதாக தொடங்கிய கட்சிகள் மதிமுக முதல் இன்றைய கமலஹாசன் கட்சி வரை யாராவது வெற்றி பெற முடிந்ததா? வேறு கட்சி, மாற்று சிந்தனை என்று யாரையும் ஏற்க மக்கள் தயாராக இல்லை என்பது நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டுள்ள இந்த இரு பெரிய கட்சிகளும் ஏன் மாற வேண்டும்? தலையை காட்டுவதற்கு மக்கள் தான் தயாராக இருக்கிறார்களே இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்...
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
08-ஜன-202219:53:59 IST Report Abuse
M  Ramachandran இந்த திராவிட கட்சிகளின் அவலங்கள் இன்னும் நிறைய. கல்வியில் புகுந்தது தமிழ் நாட்டை கிழ்நிலைக்கு தள்ளிவிட்டனர்.மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோருக்கில்லாத அக்கறை இவர்களுக்கெதற்கு. இந்தி என்று பயமுறுத்தி மக்களை கிணற்று தவளை ஆக்கி படிக்க விடாமல் செய்து கிணற்று தவளையாக செய்து விட்டனர். ஆனால் ஆளுபவர்கள் அவர்கள் மட்டும் தனிமையில் படித்து முக்கிய பதவிகள்இ பிடித்து மக்களுக்கு உதவாமல் அவர்கள் தொப்பையை நிரப்பிக்கொண்டனர்.கரன்பமற்று நம் மாணவர்களை வஞ்சித்து பிற அண்டைய மாநில மான கேரளா மாணவர்களை சிவப்பு கமபலம் விரித்து இஙகு வந்து படித்து நம் வேலைவாய்ப்பை கெடுத்தனர்.வாய் ஜாலத்தால் மக்களை பேச்சி மயக்கி உனக்கு நிலைமை தெரியாமல் செய்தனர்.இன்னும் பலப்பல.
Rate this:
Cancel
Diya -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-202219:22:44 IST Report Abuse
Diya I think most of the bribes and corruption happen due to peer pressure, fear of job transfer and herd mentality. If money is earned properly, it will be spent and saved efficiently. Illegal money is indirectly increasing unhealthy competition in the society, like huge school fees, real estate and other things which eventually will fall on their own children and further generations. People are trapped in this setup, losing peace and real happiness. Instead of earning money by developments, money is earned by stalling developments of the people. What a negative rinse and repeat cycle... Only strong leaders can set it in correct direction. Not an easy task, but always doable..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X