எல்.ஐ.சி.,க்காக எளிதாக்கப்படும் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை

Updated : ஜன 08, 2022 | Added : ஜன 08, 2022 | கருத்துகள் (14)
Advertisement
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,யில், மத்திய அரசு பங்கு விலக்கலை மேற்கொள்ள வசதியாக, அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையில், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் மாற்றங்களைச் செய்து வருகிறது.இது குறித்து, தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் செயலர் அனுராக் ஜெயின் கூறியதாவது:நாங்கள் இப்போது அன்னிய நேரடி முதலீட்டு

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,யில், மத்திய அரசு பங்கு விலக்கலை மேற்கொள்ள வசதியாக, அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையில், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் மாற்றங்களைச் செய்து வருகிறது.



latest tamil news


இது குறித்து, தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் செயலர் அனுராக் ஜெயின் கூறியதாவது:நாங்கள் இப்போது அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை மேலும் எளிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம்.முக்கியமாக, எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்குகளை, மத்திய அரசு விற்பனை செய்ய இருப்பதால், அதை எளிதாக்கும் பொருட்டு, திருத்தப்பட்ட அன்னிய நேரடி முதலீடு கொள்கையை கொண்டுவர இருக்கிறோம்.


latest tamil news



இது குறித்து, நிதி சேவைகள் துறை, முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாக துறை ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை இரு முறை ஆலோசனை கூட்டங்கள் என்னளவில் நடத்தப்பட்டு உள்ளன. இதனையடுத்து, இந்த துறைகள் அனைத்தும் ஒருமித்தமுடிவுக்கு வந்துள்ளன. அதனால், கொள்கையில் மாற்றங்களை சேர்த்து வருகிறோம். இதன் பின், அவை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும்.தற்போதைய அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி, இன்சூரன்ஸ் துறையில் ரிசர்வ் வங்கி, அரசு ஆகியவற்றின் முன் அனுமதி பெறாமலே, ஆட்டோமேட்டிக் வழியில் 74 சதவீதம் வரை, அன்னிய முதலீட்டை மேற்கொள்ளலாம்.

ஆனால், இந்த விதி எல்.ஐ.சி.,க்கு பொருந்தாது. ஏனெனில் எல்.ஐ.சி.,க்கு என தனியான சட்டம் உள்ளது.இதன்படி, அன்னிய நேரடி முதலீட்டுக்கு எல்.ஐ.சி.,யில் இடம் இல்லை. எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதால், கொள்கையளவில் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
09-ஜன-202203:40:46 IST Report Abuse
Srivilliputtur S Ramesh இதற்கு முன் ஆண்ட காங்கிரஸ் அரசு, நாட்டின் எல்லாத்துறைகளிலும் ஊழல் புற்று நோயை வளர்த்து விட்டு சென்று விட்டது. இதனால், பல அரசுத்துறைகளை சரி செய்ய வேண்டியுள்ளது. மக்கள் நல திட்டங்களுக்கு நிதி திரட்ட இது ஒரு வகை. எல்லாவற்றையும் இலவசங்களாக வாங்கி , வாங்கி நமது மக்கள் ருசி கண்டு விட்டார்கள். முதல் திரட்ட இதுவே வழி....
Rate this:
Cancel
08-ஜன-202219:00:15 IST Report Abuse
அப்புசாமி ஒன்றிய அரசுக்கு ஏகப்பட்ட பணமுடை... சொந்தக்காசில் 150 கோடி தடுப்பூசி வேற போட்டிருக்காங்க. ஏர் இந்தியாவை வித்து சாப்புட்டாச்சு... அடுத்து எல்.ஐ.சி யை விக்கணும்.
Rate this:
Cancel
selva - Chennai,இந்தியா
08-ஜன-202218:45:03 IST Report Abuse
selva விற்பதற்க்கு என்ன ரூல்ஸ்.. எவனோ கட்டினான் கோட்டை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X