சேவை பெறும் உரிமை சட்டம்: அரசுக்கு கமல் கோரிக்கை

Updated : ஜன 08, 2022 | Added : ஜன 08, 2022 | கருத்துகள் (22)
Advertisement
சென்னை : 'சேவை பெறும் உரிமை சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' என கமல் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை:அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைப்பதில்லை. பொது மக்கள் எவ்வளவு முறை மனு கொடுத்தாலும் சரியான பதில் இல்லை. அரசின் சேவைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் பெறுவதற்கு, சேவை பெறும் உரிமை சட்டம் வழிவகுக்கிறது. இச்சட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என,
Kamal, Kamal Haasan, MNM

சென்னை : 'சேவை பெறும் உரிமை சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' என கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை:அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைப்பதில்லை. பொது மக்கள் எவ்வளவு முறை மனு கொடுத்தாலும் சரியான பதில் இல்லை. அரசின் சேவைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் பெறுவதற்கு, சேவை பெறும் உரிமை சட்டம் வழிவகுக்கிறது. இச்சட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.


latest tamil news



சேவை பெறும் உரிமைச் சட்டத்தின்படி, அரசு மக்களுக்கு அளிக்கும் சேவைகளுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை உள்ளது. இந்த அபராதத் தொகை, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்படவும், குறித்த காலத்திற்குள் சேவையளிக்கத் தவறிய அலுவலர்கள் தண்டிக்கப்படுவதற்கும் கூட வாய்ப்பு இருக்கிறது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட 20 மாநிலங்களில் சேவை பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் என, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அது செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
09-ஜன-202202:08:11 IST Report Abuse
மிளிர்வன் எதையாவது சொல்லிக்கொண்டிருந்தால்தான் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நடிகருக்கு எண்ணம்.. முன் போல ஆளுங்கட்சியை சகட்டு மேனிக்கு கமெண்ட்'டவும் பயம்.. இந்த கச்சி கேஸு போடும், உள்ள வச்சி அலைக்கழிக்கும். சிறுப்பாண்மைக்கு பின்னாடி ஒளிஞ்சும் ஆதரவு தேட முடியாது.. எதுக்கு வம்பு. பூவால ஒத்துனாப்புல எதையாவது சொல்லிட்டு நடைய கட்ட வேண்டியதுதான் என்று பம்மிட்டார்..
Rate this:
Cancel
08-ஜன-202219:48:59 IST Report Abuse
theruvasagan நம்மவருக்கு புடிச்சது கட்டிப்புடி சேவை. லிவிங் டுகெதர் சேவை அலுத்துப்போனா லீவிங் ஈச் அதர் சேவை. இதல்லாம் எல்லாருக்கும் கிடைக்கணும்னு சொல்றாரோ.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
08-ஜன-202218:42:23 IST Report Abuse
GMM சேவை பெரும் உரிமை. அமுல்படுத்துவது கடினம். ஒரு திருமண பதிவு. விண்ணப்ப படிவம் / தேவையான நகல்கள் இணைப்பு அரசு வெளியிட வேண்டும். தபால் பிரிவில் மட்டும் மக்கள் தொடர்பும் பதிலும் இருக்க வேண்டும். மக்கள் இஷ்டம் போல் மனு செய்யாமல் விதிமுறை அதிகார வரம்பு அறிந்து விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து கோரிக்கைக்கும் விண்ணப்ப படிவம் இருந்தால், தாமதம் குறையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X