கபட நாடகமாடும் பாலக்காடு கோட்டம்: ஆனைமலை ரயில் பயணிகள் வாட்டம்!

Updated : ஜன 08, 2022 | Added : ஜன 08, 2022 | கருத்துகள் (21)
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன் குறித்து, உண்மைக்கு முரணான தகவல் அளித்து, சப்தமின்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளும், பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி, ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன், கடந்த சில மாதங்களாக பாலக்காடு ரயில்வே கோட்டத்தை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.முக்கிய ரயில்கள் நிறுத்தப் பட்டியலில்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன் குறித்து, உண்மைக்கு முரணான தகவல் அளித்து, சப்தமின்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளும், பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.latest tamil newsபொள்ளாச்சி, ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன், கடந்த சில மாதங்களாக பாலக்காடு ரயில்வே கோட்டத்தை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.முக்கிய ரயில்கள் நிறுத்தப் பட்டியலில் இருந்து அந்த ஸ்டேஷன் நீக்கப்பட்டது, ஸ்டேஷனில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யாமல் விட்டுள்ளதால், ஸ்டேஷனை மூடுவதற்கு கோட்ட நிர்வாகம் மறைமுகமாக முயற்சிப்பதாக புகார் எழுந்தன.இதையடுத்து, பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு பின், தற்போது பாலக்காடு - திருச்செந்துார் ரயில் மட்டும் ஆனைமலை ரோடு ஸ்டஷனில் நின்று செல்கிறது.

இதையடுத்து, ரயில் வசதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆனைமலை பகுதி மக்கள், அந்த ஸ்டேஷனில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சீசன் டிக்கெட் எடுப்பது, பயணிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது, என ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


latest tamil newsஅதன் ஒரு பகுதியாக, ஆனைமலை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில், ஸ்டேஷனில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதை குறிப்பிட்டு, அவற்றை சரி செய்து தரக்கோரி பாலக்காடு கோட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கோட்ட அதிகாரிகள், ஸ்டேஷனில் தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதாகவும், வசதிகள் செய்ய வேண்டுமெனில், பயணியர் எண்ணிக்கை அதிகம் இருக்க வேண்டும் என்றும் பதிலளித்தது.
இந்நிலையில், நேற்று ஸ்டேஷன் வளாகத்தில் சூழ்ந்துள்ள புதர் செடிகளை அகற்றி, மேல்நிலை தண்ணீர் தொட்டி பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.அடிப்படை வசதிகள் இருப்பதாக நான்கு நாட்களுக்கு முன் பதிலளித்த நிலையில், தற்போது, அதற்கான பணிகளை ரகசியமாக மேற்கொண்டு, மக்களை ஏமாற்றி கபட வேடம் போடும் பாலக்காடு கோட்ட அதிகாரிகள் மீது, மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
09-ஜன-202201:52:19 IST Report Abuse
Bismi இந்த ஓர வஞ்சனையின் காரணம் விளங்கவில்லையே ஏன் இப்படி?
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
09-ஜன-202201:48:29 IST Report Abuse
Sai @கல்யாணராமன் இதை எதிர்த்து கேக்காமே கோவை கம்யூனிஸ்ட் MP என்ன பண்ணறார் ? இல்லை விடியல் அரசுதான் என்ன பண்ணுது ??.. இவை நல்ல சொரணையான கேள்விகள்தான் கடந்த பத்தாண்டுகாலமாக மோடிக்கு பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்களோ? போனமாதம் பச்சைக் கொடியாட்டி ரயிலை இயக்கியது வானதி சீனிவாசன் கோவை மாவட்டம் முழுதுமே பத்து சட்ட மன்ற உறுப்பினர்களை கூட்டாளிகள் வென்றுள்ளார்களே என்ன பண்றது?
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
08-ஜன-202218:27:55 IST Report Abuse
chennai sivakumar The best solution for these kind if problem is to attach the regional stations to the respective regional divisional railway offices. Then all these will disappear. A policy decision should be made by the railway ministry. we have crossed 75 years of indepence and now looks like heading to more of regional politics which was not there immediately after indepence. புற்றில் இருந்து பாம்பு ஒன்று ஒன்றாக வெளி வருவது போல அண்டை மாநிலங்களுடன் தேவை இல்லாத பிரச்சினைகள் உருவாகி or (உருவாக்கி)க்கொண்டு இருக்கின்றன. இது நன்மைக்கு அறிகுறி இல்லை. ஏற்கனவே சீனக்காரன் கொல்லைப்புறம் சுலுபமாக நுழைய நேரம் பார்த்து கொண்டு இருக்கிறான். Survey வேறே பண்ணி விட்டு போய் விட்டான். நமது MP kural கொடுக்க வேண்டிய கட்டம் இது.
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
09-ஜன-202201:33:44 IST Report Abuse
Saiஏற்கனவே சீனக்காரன் கொல்லைப்புறம் சுலுபமாக நுழைய நேரம் பார்த்து கொண்டு இருக்கிறான். Survey வேறே பண்ணி விட்டு போய் விட்டான். என்பதை இந்த மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் புகாராக சொன்னால்தான் அது பிரதமருக்கே தெரிய வருமோ? சீனன் நாலா பக்கமும் ஆக்டொபஸ் போல பிடியை இறுக்குவது பொறுப்பில் உள்ளவர்களுக்கு தெரியாதா? பலவித உளவு அமைப்புகளும் எங்கே யாரெல்லாம் கஞ்சா புகைத்தார்கள் என்றும், அர்பன் நக்ஸலைட்டுகளை மூர்க்கன்களை பின்தொடரத்தான் முக்கித்துவம் தருவார்களா? MP க்கள் தங்கள் கடமையை செய்யவில்லை அவர்கள் சீனாவின் கைக்கூலிகள் என்று பழி போட்டு தப்பிக்க வேண்டுமா? இந்திய ராணுவம் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அறிவீர்களா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X