கபட நாடகமாடும் பாலக்காடு கோட்டம்: ஆனைமலை ரயில் பயணிகள் வாட்டம்!| Dinamalar

கபட நாடகமாடும் பாலக்காடு கோட்டம்: ஆனைமலை ரயில் பயணிகள் வாட்டம்!

Updated : ஜன 08, 2022 | Added : ஜன 08, 2022 | கருத்துகள் (21) | |
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன் குறித்து, உண்மைக்கு முரணான தகவல் அளித்து, சப்தமின்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளும், பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி, ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன், கடந்த சில மாதங்களாக பாலக்காடு ரயில்வே கோட்டத்தை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.முக்கிய ரயில்கள் நிறுத்தப் பட்டியலில்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன் குறித்து, உண்மைக்கு முரணான தகவல் அளித்து, சப்தமின்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளும், பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.



latest tamil news



பொள்ளாச்சி, ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன், கடந்த சில மாதங்களாக பாலக்காடு ரயில்வே கோட்டத்தை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.முக்கிய ரயில்கள் நிறுத்தப் பட்டியலில் இருந்து அந்த ஸ்டேஷன் நீக்கப்பட்டது, ஸ்டேஷனில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யாமல் விட்டுள்ளதால், ஸ்டேஷனை மூடுவதற்கு கோட்ட நிர்வாகம் மறைமுகமாக முயற்சிப்பதாக புகார் எழுந்தன.இதையடுத்து, பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு பின், தற்போது பாலக்காடு - திருச்செந்துார் ரயில் மட்டும் ஆனைமலை ரோடு ஸ்டஷனில் நின்று செல்கிறது.

இதையடுத்து, ரயில் வசதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆனைமலை பகுதி மக்கள், அந்த ஸ்டேஷனில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சீசன் டிக்கெட் எடுப்பது, பயணிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது, என ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


latest tamil news



அதன் ஒரு பகுதியாக, ஆனைமலை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில், ஸ்டேஷனில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதை குறிப்பிட்டு, அவற்றை சரி செய்து தரக்கோரி பாலக்காடு கோட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கோட்ட அதிகாரிகள், ஸ்டேஷனில் தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதாகவும், வசதிகள் செய்ய வேண்டுமெனில், பயணியர் எண்ணிக்கை அதிகம் இருக்க வேண்டும் என்றும் பதிலளித்தது.
இந்நிலையில், நேற்று ஸ்டேஷன் வளாகத்தில் சூழ்ந்துள்ள புதர் செடிகளை அகற்றி, மேல்நிலை தண்ணீர் தொட்டி பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.அடிப்படை வசதிகள் இருப்பதாக நான்கு நாட்களுக்கு முன் பதிலளித்த நிலையில், தற்போது, அதற்கான பணிகளை ரகசியமாக மேற்கொண்டு, மக்களை ஏமாற்றி கபட வேடம் போடும் பாலக்காடு கோட்ட அதிகாரிகள் மீது, மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X