காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த மக்கள்| Dinamalar

காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த மக்கள்

Added : ஜன 08, 2022 | கருத்துகள் (2) | |
சென்னை: தமிழகத்தில் கோவிட் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி கிடையாது.நாளை(ஜன.,9) முழு முடக்கம் என்பதால், இன்றே மீன் வாங்குவதற்கு மக்கள் அதிகளவில் சென்னை காசிமேடு மீன்மார்க்கெட்டில்

சென்னை: தமிழகத்தில் கோவிட் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி கிடையாது.

நாளை(ஜன.,9) முழு முடக்கம் என்பதால், இன்றே மீன் வாங்குவதற்கு மக்கள் அதிகளவில் சென்னை காசிமேடு மீன்மார்க்கெட்டில் குவிந்துள்ளனர். மீன்வரத்தும் குறைவாக உள்ளதால், விலை அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் ஒரே இடத்தில் அதிகளவு மக்கள் கூடியுள்ளதால் கோவிட் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேபோல், கடலூர் மீன் மார்க்கெட்டிலும் காலை முதலே அதிகமாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X