சென்னை: நீட் தேர்வினால் எந்த பாதிப்பும் இல்லை. மாணவர்களை குழப்ப வேண்டாம் என தமிழக அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பா.ஜ., சார்பில் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் அவர் கூறியதாவது: நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தில் உடன்பாடு இல்லாததால் வெளிநடப்பு செய்தேன்.வடகிழக்கு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க 60 சதவீத மத்திய அரசு 40 சதவீதம் மாநில அரசு நிதியுதவி அளிக்கிறது. பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை. 2013 காங்கிரஸ் திமுக அரசு ஆட்சியில் இருந்த போது, உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் நடக்கிறது.
சட்டசபையில், நீட் தேர்வு தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் சமூக நீதிக்கு எதிராக உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இது 100 சதவீதம் உண்மைக்கு புறம்பான ஒன்று. சமூக நீதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. நீட் தேர்வினால், எள்முனையளவு கூட பிரச்னை இல்லை.

இடஒதுக்கீடு பாதிக்கப்படுகிறது என்பதில் உண்மையில்லை.நீட் தேர்வுக்கு முன்பு 1 சதவதத்திற்கும் குறைவான மாணவர்களே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 7. 5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட போது சிலபிரச்னைகள் இருந்ததை மறுக்கவில்லை. முன்பு ஹிந்து, ஆங்கிலத்தில் தேர்வு நடந்தது. தற்போது 10க்கும் மேற்பட்ட மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படவில்லை.12 ஆண்டுகள் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவில்லை. பழியை மாணவர்கள் மீது போட்டு கொண்டிருக்கிறோம்.
கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வில் மாணவர்கள் தேசிய சராசரியைவிட தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். தமிழக மாணவர்கள் நம்பிக்கைவை வையுங்கள் குழப்பாதீர்கள். நீட் தேர்வினால் பாதிப்பில்லை. நீட் தேர்விற்கு வருவதற்கு முன்பு எத்தனை கிராமப்புற மாணவர்கள் படிப்பில் சேர்ந்தனர், கட்டணம் குறித்து வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE