பெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே பாகிஸ்தானுக்கு சொந்தமான படகு ஒன்றை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) வீரர்கள் பறிமுதல் செய்தனர்.
பஞ்சாபின் பெரோஸ்பூர் நகரம், சர்வதேச எல்லை பகுதியில் அமைந்துள்ளது. முந்தைய காலங்களில் இங்கு பாகிஸ்தானுக்கு சொந்தமான டுரோன்கள் தென்பட்டுள்ளன. இதனால், இந்திய பாதுகாப்பு படையினர் இந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நகரத்தின் அருகே, சர்வதேச எல்லையில் பிஎஸ்எப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிட்டீமால் செக்போஸ்ட் அருகே, கைவிடப்பட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான படகு ஒன்று இருந்ததை வீரர்கள் கண்டுபிடித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அந்த படகை கைப்பற்றிய வீரர்கள், அங்கு தீவிரமாக சோதனை நடத்தினர்.

மேலும், அருகில் உள்ள கிராமங்களுக்கு தகவல் அளித்தது, சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதாக எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில், படகு மூலம் தான் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டதாக பிஎஸ்எப் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE