சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய 2 தவணை தடுப்பூசி கட்டாயம்

Updated : ஜன 09, 2022 | Added : ஜன 08, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய, கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை கட்டாயமாக போடப்பட்டிருக்க வேண்டும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, மத்திய - மாநில அரசுகளால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. வழிகாட்டி விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை
சென்னை புறநகர் ரயில், கோவிட் தடுப்பூசி,

சென்னை: புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய, கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை கட்டாயமாக போடப்பட்டிருக்க வேண்டும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, மத்திய - மாநில அரசுகளால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. வழிகாட்டி விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில், 50 சதவீதம் பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர். பயணியர், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.ரயில் நிலைய கவுன்டரில் சான்றிதழ் காட்டினால் தான், டிக்கெட் பெற முடியும். ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையின் போது, பயணியர் சான்றிதழ் காட்ட வேண்டும்.


latest tamil news




தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இன்றி, முக கவசம் அணியாமல் பயணம் செய்தால், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். ரயில்வேயின், 'யுடிஎஸ்' செயலி வசதியில் பயணியர் மின்சார ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை, இக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜன-202218:38:20 IST Report Abuse
அப்புசாமி கட்டாயம் சரி... எப்பிடி சரி பார்ப்பீர்கள் அறிவுக் கொழுந்துகளே?
Rate this:
விசு பாய், சென்னைஆப்பு அவர்களின் சந்தேகம் சரியே. அவருக்கு நம் ஆட்களை பற்றி நன்றாகவே தெரியும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X