மக்களோடு மக்களாக கடைசி வரை கோவிட் பயணிக்கும்: சவுமியா

Updated : ஜன 08, 2022 | Added : ஜன 08, 2022 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை:‛‛கோவிட் வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் என்பதால், தமிழகத்திற்கு மீண்டும் பொது முழு ஊரடங்கு தேவையில்லை,'' என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். சென்னை, திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை, சவுமியா சுவாமிநாதன்,

சென்னை:‛‛கோவிட் வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் என்பதால், தமிழகத்திற்கு மீண்டும் பொது முழு ஊரடங்கு தேவையில்லை,'' என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார்.



latest tamil news



சென்னை, திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை, சவுமியா சுவாமிநாதன், திறந்து வைத்தார்.பின், சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டி:கொரோனா தொற்றின் முதல் அலையில், தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தெரியாத சூழலில், பொது முடக்கம் தேவைப்பட்டது. தற்போது, உலக முழுதும் மருத்துவ கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது முழு முடக்கம் தேவையில்லை.
டெல்டா வைரஸ் உடன் ஒப்பிடுகையில், ஒமைக்ரான் பரவல் வேகம் நான்கு மடங்கு அதிகரித்தாலும், மருந்து சிகிச்சைக்கான தேவை குறைவாக உள்ளதால், தமிழகத்திற்கு முழு ஊரடங்கு தேவைப்படாது.தற்போதைய சூழலில், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொது மக்கள் முழுமையாக கடைப்பிடித்தால் போதுமானது.
மேலும், மூன்றாவது அலையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலும் உயிர் இழப்பு பெரிய அளவில் கண்டறியப்படவில்லை. தடுப்பூசி செலுத்துவதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

எனவே, வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள் கட்டாயம் 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போட்டு கொள்வது நல்லது. வருங்காலங்களில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொற்றா நோய்களை கண்டறியும் விதமாக, தமிழக அரசின் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்திற்கு என் பாராட்டுக்கள்.


latest tamil news



தடுப்பூசி செலுத்துவதால், பொது மக்களுக்கு நிலையான எதிர்ப்பாற்றல் உருவாகினாலும், தொடர்ந்து வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து வருகின்றன. அதனால், கோவிட் வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜன-202207:16:28 IST Report Abuse
அப்புசாமி அம்மாடியோவ்... வேதாந்தம் மாதிரி கோவிடை அலசி ஆராய்ஞ்சு கண்டு பிடிச்சு சொல்லிட்டாங்க.
Rate this:
Cancel
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
08-ஜன-202220:01:58 IST Report Abuse
Palanivelu Kandasamy சொல்வது எளிது. எப்போதும் மாஸ்க்கும் சானிடைசருமாக வாழ்வது அவ்வளவு எளிதானதா? அடுத்த தலைமுறையினரின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. விஞ்ஞானிகள் இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.
Rate this:
sivan - seyyur,இந்தியா
09-ஜன-202208:53:06 IST Report Abuse
sivan ஓ மி கி ரா ன் , டெல்டா , கோ ரோ நா எல்லாமே நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாக உள்ளது. நமக்கு நம் இந்திய பரம்பரிய முறையில் இதற்கு நிறைய தடுப்பு மருந்துகள் உள்ளன. விஞ்ஞானிகள் அவர்கள் வழியில் தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கட்டும். நமது சைடில் இருந்து நாம் கபாசுர குடிநீர் மூச்சு பயிற்சி , போன்றவற்றை கைக்கொண்டு தற்காத்துக் கொள்ள முயற்சி செய்வோம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X