டில்லி 'உஷ்ஷ்ஷ்': வாரணாசியில் மனதின் குரல்

Updated : ஜன 09, 2022 | Added : ஜன 08, 2022 | கருத்துகள் (1)
Share
Advertisement
மனதின் குரல் என்ற நிகழ்ச்சியை 'ரேடியோ, டிவி' வாயிலாக நடத்தி வருகிறார் பிரதமர் மோடி. இதில் மக்களுடன் உரையாடுவதோடு, இந்தியாவின் மூலை முடுக்குகளில் சிறப்பாக பணியாற்றும் பலரையும் அறிமுகப்படுத்தி வருகிறார் பிரதமர். மனதின் குரலின் 100வது நிகழ்ச்சி 2023ம் ஆண்டு மார்ச்சில் நடக்கவுள்ளது.இதை பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டுள்ளார் மோடி. 100 மாதங்களில் மக்களுடன் உரையாடியதன்
டில்லி 'உஷ்ஷ்ஷ்': வாரணாசியில் மனதின் குரல்

மனதின் குரல் என்ற நிகழ்ச்சியை 'ரேடியோ, டிவி' வாயிலாக நடத்தி வருகிறார் பிரதமர் மோடி. இதில் மக்களுடன் உரையாடுவதோடு, இந்தியாவின் மூலை முடுக்குகளில் சிறப்பாக பணியாற்றும் பலரையும் அறிமுகப்படுத்தி வருகிறார் பிரதமர். மனதின் குரலின் 100வது நிகழ்ச்சி 2023ம் ஆண்டு மார்ச்சில் நடக்கவுள்ளது.

இதை பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டுள்ளார் மோடி. 100 மாதங்களில் மக்களுடன் உரையாடியதன் சாராம்சத்தை இதில் சொல்ல முடிவெடுத்துஉள்ளாராம். மோடியின் லோக்சபா தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது. பிரதமர் யார் யாரோடு மனதின் குரலில் பேசினாரோ, அவர்கள் அனைவரும் 100 வது நிகழ்ச்சியில் பங்கேற்கஉள்ளனர். முடி திருத்தும் கடை நடத்தும் தமிழர், நுாலகத்தையும் நடத்துகிறார். இவரை பிரதமர் மனதில் குரலில் பாராட்டியுள்ளார். இவர் உட்பட மனதில் குரலில் பங்கேற்ற மற்ற தமிழர்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தனிமையில் ராகுல்?


உத்தர பிரதேசம், பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளிநாடு சென்றுள்ளார்.கிறிஸ்துமஸ் சமயத்தில் தன் பாட்டியுடன் இருக்கவே, ராகுல் இத்தாலி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரிலிருந்து பஞ்சாபுக்கு வந்த விமான பயணியர் 125 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 'ஒரு வேளை இத்தாலியிருந்து ராகுல் வந்தால் அவரது கதி என்னாகும். கொரோனா இல்லையென்றாலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமே' என, கவலையில் உள்ளனர் கட்சி தலைவர்கள்.


கெட்ட சகுனம்?

உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. புஷ்கர் சிங் தாமி முதல்வராக உள்ளார்.இந்த மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி கிரிக்கெட் வீரர். தினமும் அரை மணி நேரம் கிரிக்கெட் விளையாடி விட்டுத்தான் அலுவலக வேலைகளை கவனிப்பார்.சமீபத்தில் விளையாடும் போது கையில் காயம் ஏற்பட்டு விட்டது.

இப்போது கையில் கட்டுடன் பிரசாரம் செய்து வருகிறார்.'முதல்வர் கையில் கட்டுடன் பிரசாரம் செய்கிறார். பா.ஜ.,வுக்கு சகுனம் சரியில்லை' என்கின்றனர், சிலர். இதேபோல் சமீபத்தில் டில்லியில் நடந்த நிகழ்சியில் காங்., தலைவர் சோனியா கட்சி கொடியேற்றினார். ஆனால் அது சரியாக ஏற்றப்படாமல் கீழே விழுந்து விட்டது. இதை வைத்து, 'காங்கிரசுக்கும் சகுனம் சரியில்லை' என்றும் சிலர் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
09-ஜன-202207:38:58 IST Report Abuse
R.RAMACHANDRAN மனதின் குரல் என எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எங்கெங்கு காணினும் ஊழல் பேர்வாழிகள் நிறைந்துள்ள இந்த நாட்டிலே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X