ஆன்லைன் அபாகஸ் போட்டி

Added : ஜன 08, 2022
Advertisement
காரைக்குடி:சர்வதேச அளவிலான ஆன்லைன் அபாகஸ் போட்டி சீமாஸ் சார்பில் நடந்தது. இதில்,8 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் காரைக்குடி பிரிலியன்ட் அகாடமியை சேர்ந்த 27 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மூன்றுமாணவர்கள் சாம்பியன் பட்டமும், 13 மாணவர்கள் முதலிடமும், 10 மாணவர்கள் இரண்டாமிடமும், ஒரு மாணவி மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காரைக்குடி

காரைக்குடி:சர்வதேச அளவிலான ஆன்லைன் அபாகஸ் போட்டி சீமாஸ் சார்பில் நடந்தது. இதில்,8 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் காரைக்குடி பிரிலியன்ட் அகாடமியை சேர்ந்த 27 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மூன்றுமாணவர்கள் சாம்பியன் பட்டமும், 13 மாணவர்கள் முதலிடமும், 10 மாணவர்கள் இரண்டாமிடமும், ஒரு மாணவி மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காரைக்குடி பிரிலியன்ட் அகாடமியில் பரிசளிப்பு விழா நடந்தது. கனரா வங்கி சிற்பக்கலை பயிற்சி மைய இயக்குனர் அ.மகேந்திரன், ஒ.சிறுவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பா.ராமசாமி மாணவர்களுக்கு பரிசளித்தனர். அகாடமி இயக்குனர் ஆர்.பி.நீலாவதி சிறந்த அகாடமிக்கான விருதை பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X