எக்ஸ்குளுசிவ் செய்தி

சிறப்பு பாதுகாப்பு படை சட்டத்தில் திருத்தம்; பஞ்சாப் குளறுபடியால் அமித் ஷா அதிரடி

Updated : ஜன 09, 2022 | Added : ஜன 08, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியை அடுத்து, சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவு செய்துள்ளார்.எதிர்காலத்தில் ஏற்படும்இதுபோன்ற பாதுகாப்பு குளறுபடிகளுக்கு மாநில டி.ஜி.பி.,க்களை பொறுப்பேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.போராட்டம்பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித்
 சிறப்பு ,பாதுகாப்பு படை,சட்டம், திருத்தம்,அமித் ஷா, அதிரடி

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியை அடுத்து, சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவு செய்துள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படும்இதுபோன்ற பாதுகாப்பு குளறுபடிகளுக்கு மாநில டி.ஜி.பி.,க்களை பொறுப்பேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


போராட்டம்

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது.
உத்தர பிரதேசம், பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சமீபத்தில் பஞ்சாபுக்கு பயணம் செய்தார். பிரதமர் பயணித்த பாதையில், சிலர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நடுவழியில் 20 நிமிடங்கள் வரை காத்திருந்த மோடி பயணத்தை ரத்து செய்து டில்லி திரும்பினார்.இந்த விவகாரம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் மோடி விளக்கினார்.பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தை பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தீவிரமாக எடுத்து கொண்டுள்ளார்.


விசாரணை

'ஒரு வேளை இது கொலை முயற்சியாக இருக்குமா' என்ற சந்தேகமும், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகள் சதி இருக்குமா என்றும் மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.பா.ஜ., தலைவர்கள் இந்த விவகாரத்தை மிகவும் முக்கியமாக பார்க்கின்றனர். பஞ்சாப் முதல்வரின் நடத்தையும் விசாரணை வளையத்தில் வந்துள்ளது.பிரதமரின் பாதுகாப்பை எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை கவனித்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் 1985ல் இந்த எஸ்.பி.ஜி., தொடர்பாக சட்டம் உருவாக்கப்பட்டது.பிரதமரின் பாதுகாப்பில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்பதற்கு இந்த சட்டத்தில் சரியான விளக்கம் இல்லை. காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்ட பின் இது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷன் இதைச் சுட்டிக் காட்டியுள்ளது.

பஞ்சாப் குளறுபடிக்குப் பின் இந்த சட்டத்தில் சில முக்கிய மாற்றங்களை செய்ய அமித் ஷா முடிவெடுத்துள்ளார்.சட்டத்தில் திருத்தம்'பிரதமர் எந்த மாநிலத்திற்கு சென்றாலும், சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி., தான் அவரது பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும்.'ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அவர்கள் பதவி பறிபோவதுடன் சிறைக்கும் செல்ல வேண்டியிருக்கும்' என, இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய, உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

சோனியா கவலை
பஞ்சாப் மாநில காங்கிரசில் ஏற்கனவே உட்கட்சி பிரச்னை தீவிரமாக உள்ளது. அமரீந்தர் சிங் கட்சியில் இருந்து வெளியேறியதில் இருந்து பஞ்சாபில் காங்கிரஸ் கலகலத்து போயுள்ளது. இந்நிலையில் பஞ்சாபுக்கு வந்த பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியும் அந்த கட்சிக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் விரைவில் நடக்கஉள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலில் கட்சியின் வெற்றி பாதிக்கப்படுமோ என சோனியா கவலை அடைந்துள்ளார். இந்த விஷயத்தில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் பொறுப்பற்ற பதில், சோனியாவை மேலும் கோபப்படுத்தியுள்ளது.சரண்ஜித்தை போனில் அழைத்து கடுமையாக திட்டியுள்ளார் சோனியா. இதையடுத்து தான், பத்திரிகையாளர்களை அழைத்து, பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விளக்கம் அளித்துள்ளார், சரண்ஜித்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-ஜன-202201:43:33 IST Report Abuse
Natarajan Ramanathan தீவிர விசாரணை செய்து சதிகாரர்களை முற்றிலும் அடியோடு ஒழிக்கவேண்டும்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-ஜன-202213:33:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அப்படிப் பாத்தா அரசியல் சதி பண்ண திட்டமிட்ட அமீத் சா, அதுக்கு மண்டையாட்டிய எஸ் பி ஜி தலைமை, அப்புறம் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் போகச்சொல்லி ஒப்புக்கொண்ட பிரதமர், அவர்களுக்குத் தான் பிரச்சினை ஆகும்....
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
09-ஜன-202221:01:33 IST Report Abuse
Samathuvan குளறுபடி செய்ததது ம‌த்‌திய அரசா மாநில அரசா? இதில் ரொம்ப குழப்பம் உள்ளது. அப்படி என்றால் குன்னூரில் நடந்தது குளறுபடியா, கோளாரா இல்லை வேறு எதுவுமா? ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது இந்த ஆட்சிக்கு நேரம் வந்தாகி விட்டது.
Rate this:
raja - Cotonou,பெனின்
10-ஜன-202215:39:38 IST Report Abuse
rajaஎது கேடுகெட்ட விடியாத தமிழக ஊராச்சி ஒன்றிய ஆட்சிக்கா?......
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-ஜன-202218:16:07 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஏற்கனவே பாஜாக்காவுக்கு ரெண்டு மூணு சீட்டு தான் கிடைக்கும் என்ற பரிதாபத்தில் இருந்தாங்க.. இப்போ கிடைக்க இருந்த சீட்டுகளும் அம்பேல் ஆகி மொத்தமா வாஷ் அவுட் ஆகப்போறது பாஜாக்கா. எல்லாம் நன்மைக்கே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X