புதுடில்லி : ரயில் நிலையங்களின் மேம்பாட்டு கட்டணத்தை பயணியரிடம் வசூலிக்க ரயில்வே முடிவு செய்துஉள்ளது.
![]()
|
இந்திய ரயில்வே சார்பில் பயணியருக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் பல்வேறு ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டு, நவீனப் படுத்தப்பட்டுள்ளன.மத்திய பிரதேசத்தின் போபால் ராணி கமலாபதி நிலையம் மற்றும் குஜராத் காந்திநகர் நிலையம் ஆகியவற்றில் இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன.
மேலும் பலவற்றில் பணிகள் நடக்கின்றன.இந்த ரயில் நிலையங்களை பயன்படுத்தும் பயணியரிடம் இருந்து மேம்பாட்டு கட்டணம் வசூலிக்க ரயில்வே முடிவு செய்துஉள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:நவீனப் படுத்தப்பட்ட ரயில் நிலைய மேம்பாட்டு கட்டணத்தை பயணியரிடம் வசூலிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
![]()
|
இதன்படி ஒவ்வொரு பயணியிடமும் 'ஏசி' வகுப்புகளுக்கு 50 ரூபாய், துாங்கும் வசதி பெட்டிக்கு 25 மற்றும் சாதாரண வகுப்புக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படும். டிக்கெட் மற்றும் முன்பதிவு கட்டணத்துடன் சேர்த்து இந்த தொகை பெறப்படும். பயணத்தில் ஒருமுறை மட்டும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துவோரிடம் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
இதே ரயில் நிலையத்தை பயன்படுத்தும் புறநகர் ரயில் பயணியரிடம் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படாது.இது போன்ற ரயில் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்த பிறகே கட்டண முறை அமலுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement