சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

பழனிசாமியின் பெயர் மாறுகிறதா?

Updated : ஜன 09, 2022 | Added : ஜன 09, 2022 | கருத்துகள் (3)
Advertisement
ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிப்பதால், 'கான்பரன்ஸ் கால்' அழைப்பில், நண்பர்கள் இணைந்தனர்.''இப்படியும் ஒரு சிக்கல் இருக்குது பா...'' என்றபடியே முதல் தகவலுக்கு வந்தார், அன்வர்பாய்.''என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி. ''தமிழக வனத்துறையில, 'பாரஸ்டர், ரேஞ்சர்' என, மொத்த பணியிடத்துல, 40 சதவீதம் அளவுக்கு பெண் அலுவலர்கள் இருக்காங்க பா...''மனித -- விலங்கு
டீ கடைபெஞ்ச்ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிப்பதால், 'கான்பரன்ஸ் கால்' அழைப்பில், நண்பர்கள் இணைந்தனர்.''இப்படியும் ஒரு சிக்கல் இருக்குது பா...'' என்றபடியே முதல் தகவலுக்கு வந்தார், அன்வர்பாய்.''என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி. ''தமிழக வனத்துறையில, 'பாரஸ்டர், ரேஞ்சர்' என, மொத்த பணியிடத்துல, 40 சதவீதம் அளவுக்கு பெண் அலுவலர்கள் இருக்காங்க பா...''மனித -- விலங்கு மோதல், மரம் கடத்தல், பழங்குடியினர் வாழ்வாதார பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளின் போது பெண் அலுவலர்கள் பலர், காட்டுக்குள் போய், களப்பணியில ஈடுபட தயக்கம் காட்டுறாங்க பா... ''ஓராண்டு காலம் மகப்பேறு விடுப்பு கொடுக்குறதால, களப்பணியில தொய்வும், மற்ற பணியாளர்களுக்கு கூடுதல் பணிச் சுமையும் ஏற்படுதாம் பா...''ஏற்கனவே, தமிழக வனத்துறையில, 50 சதவீதம் அளவுக்கு காலிப் பணியிடம் இருக்கு... இதனால, மத்தவங்களுக்கு பணி பளு அதிகமாகி, பாதிக்கப்படுறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.''இதுக்கு பேர் தான், 'பகுத்தறிவு கொள்கை'யா ஓய்...'' என அடுத்த தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...''முருகனின் ஆயுதத்தை பெயரா உடைய அமைச்சர், மேடை தோறும் தன்னை, 'நாத்திகவாதி'ன்னு மறக்காம சொல்லிப்பார் ஓய்...''திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு போனா, அவரது அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிடும்னு ஜோசியர் சொன்னதால, அந்த பக்கமே போக மாட்டார்... இது, ஊரறிஞ்ச ரகசியம் ஓய்... ''அமைச்சரானது முதல், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சியில பங்கேற்கும்போது, பணம் கொடுத்து ஆட்களை சேர்த்து, 25க்கும் மேற்பட்ட பெண்களை வரிசையாக நிறுத்தி, தனக்கு திருஷ்டி கழிச்சுண்டு வர்றார் ஓய்...''அப்படி திருஷ்டி கழிக்க, அப்பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்யலைன்னா, அமைச்சருக்கு முகம் சுருங்கி போயிடறது... 'இது எல்லாம் என்ன வகை நாத்திகமோ தெரியலை'ன்னு, கட்சியினர் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''ஒரு விஷயம் கிடைச்சுருக்கு வே...'' என்றபடியே கடைசி தகவலை சொல்ல ஆரம்பித்தார், அண்ணாச்சி.''ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., ஆட்சியில, முதல்வர் பதவியை பழனிசாமி பிடிச்சாருல்லா... பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா நெருக்கடிகளை சமாளித்து, ஆட்சியை தக்க வைச்சார்... கட்சியையும் கட்டுப்பாட்டுல வைச்சிருந்தாரு வே...''ஆட்சி மாற்றத்துக்கு பின், எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிச்சாரு... அவருக்கு நெருக்கமான, முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன், உதவியாளர் மணி மீது வழக்குகள் பாய்ஞ்சதால, பழனிசாமி கொஞ்சம் ஆடிப்போனாரு வே...''இதனால, கேரளா பணிக்கரை வரவழைச்சு, தன் வீடுகள்ல யாகம் நடத்தினாராம்... அவர் ஜாதகம் மட்டுமில்லாம மகன், பேரன் ஜாதகத்தை அலசிய பணிக்கர், பெயரை மாத்தணும்னு சொன்னாராம் வே... ''அதனால, பழனிசாமி என்ற பெயரை, 'பழனிசுவாமி'ன்னு மாத்த முடிவு செஞ்சிருக்காரு... அரசிதழில் பெயர் மாத்துறதுக்கான வேலையை தொடங்கிட்டாரு வே... இதுக்கு முன்னோட்டமா, அவரது ஆதரவாளர்கள், சமூக வலைதளங்கள்ல, 'பழனிசுவாமி'ன்னு பயன்படுத்த தொடங்கிட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.நண்பர்கள், மொபைல் போன் இணைப்பை துண்டித்தனர்.


தரக்குறைவாக பேசும் அதிகாரியால் பெண்கள் கண்ணீர்!


ஞாயிறு ஊரடங்கு என்பதால், குப்பண்ணா வீட்டில் நண்பர்கள் ஒன்றுகூடினர்.''அதிகாரிகளுக்கு புரோக்கர்களா மாறிட்டாங்க பா...'' என்றபடியே, முதல் தகவலை சொல்ல துவங்கினார், அன்வர்பாய்.''எந்த துறை விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தின் ஒரு பகுதியாக வட்ட வழங்கல் அலுவலகமும் செயல்படுது... பாலக்கோடு தாலுகாவுல இருக்கிற, 32 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த மக்கள் இங்க வர்றாங்க பா...''இவங்க தந்துட்டு போற விண்ணப்பங்கள்ல இருக்கிற போன் நம்பர்களுக்கு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில புரோக்கர்கள் தொடர்பு கொண்டு பேரம் பேசுறாங்க... ஒரு வாரத்துல ரேஷன் கார்டு வாங்கி தர, 4,000த்துல இருந்து 6,000 ரூபாய் வரை வசூல் பண்றாங்க பா... ''இந்த மாதிரி, ஒவ்வொரு வேலைக்கும், 'ரேட் பிக்ஸ்' பண்ணி வசூலிச்சு, தங்களது, 'கமிஷனை' எடுத்துட்டு, அதிகாரிகளுக்கு உரிய பங்கை குடுத்துடுறாங்க... மொத்தத்துல, தாசில்தார் அலுவலகமே புரோக்கர்கள் பிடியில தான் இருக்குது பா...'' என்றார் அன்வர்பாய்.''பெண் நிர்வாகியின் மருத்துவ செலவுகளை ஏத்துண்டார் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...''புத்தாண்டை முன்னிட்டு, சென்னையில, பா.ம.க., சிறப்பு பொதுக்குழு நடந்துதோல்லியோ... இதுல பங்கேற்ற மகளிர் அணி துணை செயலர் சாந்தி கிருஷ்ணன், கால் தவறி கீழே விழுந்துட்டா ஓய்...''அவாளுக்கு அங்கயே, கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி முதலுதவி சிகிச்சை கொடுத்து, கட்சியின் ஊடக மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனை அழைச்சு, தனியார் மருத்துவமனையில சேர்க்க ஏற்பாடு செஞ்சார்...''அங்க, பெண் நிர்வாகிக்கு, கால் மற்றும் தோள்பட்டையில ரெண்டு ஆப்பரேஷன் செய்திருக்கா... இதுக்காக, மருத்துவமனையில எட்டு நாள் தங்கியிருந்தாங்க ஓய்... எட்டு நாளும், அன்புமணி போன்ல கூப்பிட்டு நலம் விஜாரிச்சாராம்... அதுவும் இல்லாம, சிகிச்சை செலவு முழுக்க அன்புமணியே ஏத்துண்டாராம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''அதிகாரியின் தரக்குறைவான பேச்சால, பெண் துணை கலெக்டர்கள் கண்ணீர் விடுதாவ வே...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார் அண்ணாச்சி.''எந்த ஊர் அதிகாரியைச் சொல்றேள்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை உயர் அதிகாரி, தனக்கு கீழ வேலை பார்க்குற பெண் துணை கலெக்டர்களை, தரக்குறைவா பேசுறதோட, அவங்க உருவத்தையும் கேலி செய்து பேசிட்டு இருக்காரு வே...''சமீபத்துல, இவரிடம் ஏச்சு வாங்குன ரெண்டு துணை பெண் கலெக்டர்கள், கண்ணீர் மல்க கலெக்டரிடம் புகார் தெரிவிச்சிருக்காவ... இன்னும் இரண்டு பெண் அதிகாரிகள், பொதுத் துறையில இருக்கிற உயர் அதிகாரியிடம் புகார் தெரிவிச்சிருக்காவ வே...''அதே நேரம், நாலு பெண் துணை கலெக்டர்களும் எழுத்துப்பூர்வமா புகார் தராம, வாய்மொழியா தான் தெரிவிச்சிருக்காவ... ஆனா, ஒரு பெண் உதவியாளர் தைரியமா எழுத்துப்பூர்வமாவே கலெக்டரிடம் புகார் குடுத்துட்டு, நடவடிக்கைக்கு, 'வெயிட்' பண்ணிட்டு இருக்காங்க வே...'' என்றார் அண்ணாச்சி. ''பன்னீர்செல்வம், இந்த பேப்பரை அங்க வையும்...'' என, நண்பரை ஏவியபடியே குப்பண்ணா எழ, நண்பர்கள் கிளம்பினர்.Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-ஜன-202219:18:37 IST Report Abuse
D.Ambujavalli கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்கு கஷாயம் குடித்தது போல பேரை மாற்றி இன்னும் என்னென்ன மாற்றலாம் மனைவி, மகன், பேரன் மருமகள் எல்லார் பெயரையும் மாற்றிப்பார்க்கலாமே
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
09-ஜன-202215:06:36 IST Report Abuse
Anantharaman Srinivasan நான் நாத்திகவாதி என சொல்லிவிட்டு திருஷ்டி சுத்தி போடுவதெல்லாம் எல்லாம் தங்கள் தலைவர் கருணாநிதி follow பண்ணின நாத்திகம் வகை. தோளில் மஞ்சள் சால்வை. கோபாலபுரம் வீட்டைவிட்டு கிளம்பும்போது எதிரிலிருக்கும் கோவிலை பார்த்தபடி கிளம்புவது. பிராமின் குருவை கொண்டு யோக செய்வது. இறுதி காலத்தில் புட்டபருத்தி சாய்பாபவை வீட்டுக்கு அழைத்து குடும்பத்தோடு ஆசி பெற்றது. கடைசி தொண்டர்கள் தான் இவர்களை நம்பி ஏமாந்து நிற்கிறார்கள் ...
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
09-ஜன-202214:24:26 IST Report Abuse
sankar அவரது தோற்றத்திற்கு பழநிஸ்வாமியா? /பழநிச்சாமி என்பதே பொருத்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X