உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் திமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
சா.விசு, பாளையங்கோட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பேய்க்கு வாக்கப்பட்டால், முருங்கை மரம் ஏறித் தானே ஆக வேண்டும்' எனக் கூறுவர். தமிழக மக்கள் இப்போது தான், முருங்கை மரம் ஏறத் துவங்கியுள்ளனர்; அடுத்த நான்கு ஆண்டுகளில் சுத்தமாக பழகி விடுவர்.

தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலரும், எம்.எல்.ஏ.,வுமான துரை.சந்திரசேகரன், 2022ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் ஒன்றை மக்களுக்கு, வினியோகித்து இருக்கிறார்.அதன் பின்புறத்தில், பிற மத பண்டிகை தினங்களை விபரமாக அச்சிடச் சொல்லி அறிவுறுத்தி உள்ளார். ஆனால், ஹிந்து பண்டிகைகளை மட்டும், 'அரசு விடுமுறை நாட்கள்' என்று அச்சிடச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார்.
நிச்சயமாக, அந்த காலண்டர் அச்சகத்தார், தங்கள் விருப்பம் போல இந்த செயலை செய்திருக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம்.எதிர்ப்பு அதிகமானால், அச்சகத்தின் மீது பழியை போட்டு, தப்பித்துக் கொள்ளலாம். எதிர்ப்பு எழவில்லையானால், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும் இதே வழிமுறையை பின்பற்றுவோம் என்பதன் வெளிப்பாடே, இந்த பரிசோதனை முயற்சி. எம்.ஜி.ஆர்., நடித்த, நம் நாடு படத்தில், 'துரை... உனக்கு சட்டமும் தெரியலை; ஒரு மண்ணும் தெரியலை' என்ற வசனம் இடம்பெற்றிருக்கும்.
அது போல, தி.மு.க., - எம்.எல்.ஏ., துரை.சந்திரசேகரனுக்கு, தமிழும் தெரியலை போலும். ஏனெனில், கடவுள் மற்றும் மனிதரின் பெயரை எழுதும் போது தான், 'திரு' மற்றும் 'ஸ்ரீ' என குறிப்பிடுவர்.'திரு கருணாநிதி' அல்லது 'ஸ்ரீ கருணாநிதி' என்றால் சரி. 'திரு.அறிவாலயம், ஸ்ரீ அறிவாலயம்' என்பது தவறு.

துரை.சந்திரசேகரன் ஆலோசனைக்கு இணங்க அச்சடிக்கப்பட்டுள்ள, அந்த தி.மு.க.,வின் காலண்டரில் தமிழ் ஆண்டுகளின் பெயர்களை, 'ஸ்ரீ பிலவ, ஸ்ரீ சுபகிருது' என்று அச்சிட்டுள்ளனர். என்னே அறிவு?இது ஒன்றிலேயே, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் வண்டவாளம், தண்டவாளம் ஏறி இருக்கிறது.
இந்த, 2022 காலண்டரில் ஹிந்து பண்டிகைகளை திட்டமிட்டு தவிர்த்தோர், அடுத்து வரும் ஆண்டுகளில் சீன மற்றும் பாகிஸ்தான் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களை அச்சிட்டு வழங்குவர். சத்தியமாக ஹிந்து பண்டிகை நாட்களை அச்சிடவே மாட்டார்கள்.
ஏனெனில், அவர்கள் வந்த வழி அப்படி; அவர்களின் வார்ப்பு அப்படி. இது முடிவல்ல; ஆரம்பம் தான்.மக்களே... அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, மனதை தேற்றி, முருங்கை மரத்தில் ஏற பழகிக் கொள்ளுங்கள். வேறு வழி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE