வேலுார் : வேலுாரில், சிறைத்துறை போலி அடையாள அட்டையுடன், பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேலுார் அடுத்த மேல்மொணவூரை சேர்ந்தவர், உதயகுமார், 27. இவர், போலியாக சிறைத்துறை அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து, எஸ்.பி., ராஜேஸ் கண்ணனிடம் புகார் அளித்தனர்.உதயகுமாரின் மொபைல் போன் எண்ணை, போலீசார் ஆய்வு செய்ததில், அவர் மோசடி செய்தது உறுதியானது.
உதயகுமாரை நேற்று கைது செய்து, சிறைத்துறை போலி அடையாள அட்டை மற்றும் 21 ஆயிரத்து 700 ரூபாயை பறிமுதல் செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:கைதான உதயகுமார், 10ம் வகுப்பு படித்து விட்டு, வேலுாரில் ஓட்டல் சர்வராக பணியாற்றி வந்தார். பல்வேறு இடங்களில் பிக்பாக்கெட், வழிப்பறியில் ஈடுபட்டார். இதனால் காட்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, ஆறு மாதத்தில் விடுதலையானார்.
பிறகு, வேலுார் சிறை துறையில், மனநல ஆலோசகராக பணியாற்றி வருவதாக கூறி, போலி அடையாள அட்டை தயாரித்து, எழில் நகரில் வாடகை வீட்டில் தங்கி மோசடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். பலரிடம் தன்னிடம் இருந்த அடையாள அட்டையை காண்பித்து, சிறைத்துறை, தபால் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 5.௫௦ லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார். மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களை நடத்தும் ௪௦ பேரிடம், ௨ லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு, வேறு ஒரு மொபைல்போனில் தொடர்பு கொள்ளும் படி கூறியுள்ளார். அதில், சப் - கலெக்டர் பேசுவது போல, தானே பெண் குரலில் பேசி, நம்ப வைத்துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.போலி சிறைத்துறை அடையாள அட்டையை காண்பித்து, பண மோசடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட உதயகுமார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE