ஒரு வாரத்திற்கு முன் மாயமானவர் கண்மாய்க்குள் மீட்பு| Dinamalar

ஒரு வாரத்திற்கு முன் மாயமானவர் கண்மாய்க்குள் மீட்பு

Added : ஜன 09, 2022 | |
சின்னாளபட்டி : திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் மாயமான சரவணன் 41, ஒரு வாரத்திற்குப்பின் பின் கண்மாய் நீருக்குள் உயிருடன் மீட்கப்பட்டார்.சின்னாளபட்டி பூஞ்சோலை தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணன். மனநலம் பாதிக்கப்பட்ட, பேச்சுத் திறனற்ற மாற்றுத்திறனாளி. சகோதரர் ஒருவரின் பராமரிப்பில் இருந்தார். ஜன.,1ல் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தவர் திடீரென மாயமானார். பல

சின்னாளபட்டி : திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் மாயமான சரவணன் 41, ஒரு வாரத்திற்குப்பின் பின் கண்மாய் நீருக்குள் உயிருடன் மீட்கப்பட்டார்.சின்னாளபட்டி பூஞ்சோலை தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணன். மனநலம் பாதிக்கப்பட்ட, பேச்சுத் திறனற்ற மாற்றுத்திறனாளி. சகோதரர் ஒருவரின் பராமரிப்பில் இருந்தார்.

ஜன.,1ல் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர்.நேற்று பாரதி நகரைச் சேர்ந்த லோடுமேன் அசோக், அப்பகுதியில் தம்பித்தோட்டம் கண்மாய் வழியே சென்றார். அடர்ந்த புதருக்குள் மார்பளவு தண்ணீரில், சரவணன் அமர்ந்திருப்பது தெரிந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நீந்திச் சென்று, தண்ணீருக்குள் உடல் ஊறிப்போய் இருந்த நிலையில் உயிருடன் மீட்டனர். அவருக்கு முதலுதவி அளித்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X