சமூக நீதியில் புதிய புரட்சி; அண்ணாமலை பாராட்டு

Added : ஜன 09, 2022 | கருத்துகள் (37)
Advertisement
சென்னை : 'தேசிய இட ஒதுக்கீட்டை 27 சதவீதமாக முன்மொழிந்த பா.ஜ., அரசின் முடிவை அங்கீகரித்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:இதர பிற்படுத்தப்பட் டோர் இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான நிர்வாக முடிவை உறுதி செய்து, உத்தர விட்ட முதல் அரசு பா.ஜ., அரசு தான். பிரதமர் மோடி தன், 'டுவிட்டர்' தளத்தில் 'எம் அரசில் மிக


சென்னை : 'தேசிய இட ஒதுக்கீட்டை 27 சதவீதமாக முன்மொழிந்த பா.ஜ., அரசின் முடிவை அங்கீகரித்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



latest tamil news



அவரது அறிக்கை:இதர பிற்படுத்தப்பட் டோர் இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான நிர்வாக முடிவை உறுதி செய்து, உத்தர விட்ட முதல் அரசு பா.ஜ., அரசு தான். பிரதமர் மோடி தன், 'டுவிட்டர்' தளத்தில் 'எம் அரசில் மிக முக்கிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 'இதர பிற்படுத்தப்பட்டவருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு 10 சதவீதமும் தேசிய ஒதுக்கீட்டு திட்டத்தில் இளநிலை, முதுநிலை மருத்துவ, பல் மருத்துவ நுழைவு தேர்வில் நடப்பாண்டில் இருந்து அமல்படுத்தப்படும்' என்று 2021 ஜூலை 29ல் அறிவித்தார்.


latest tamil news



இது, சமூக நீதியில் ஒரு புதிய புரட்சி, ஒரு புதிய வரலாறு, பா.ஜ., ஆட்சியில் படைக்கப்பட்டது.இட ஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாக, பா.ஜ., அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் அடிப்படையில், இந்த வழக்கிற்கான மனு ஏற்கப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டிலேயே தன் கொள்கை முடிவை பா.ஜ., அரசு தெளிவாக எடுத்துரைத்து விட்டது.அதில், ஓ.பி.சி., எனும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தடையுமில்லை என்று கூறப்பட்டுள்ளது. தற்போது யார் யாரோ உறக்கம் கலைந்து வந்து, தங்களால் தான் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது;

இந்தியாவிற்கே நாங்கள் தான் முன்னோடி என்று பேசுவதை கேட்க வேடிக்கை யாக உள்ளது.கடந்த 2004 -- 14ல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க., ஆட்சியில் இருந்த காலத்தில், அப்போதே அவர்கள் இந்த ஒதுக்கீட்டை செய்திருக்கலாமே. தன் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருந்தபோது எதுவும் செய்யாமல், எதிர்க்கட்சிக்கு எந்த நல்ல பெயரும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்துடன் கதறும் நபர்களை பார்க்க பரிதாபமாக தான் இருக்கிறது.

காங்கிரஸ் -- தி.மு.க., ஆட்சியில் செய்ய தவறியதை பிரதமர் மோடி செய்து, வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். அவரே உண்மையான சமூக நீதி காவலர். ஓ.பி.சி.,க்கான தேசிய இட ஒதுக்கீட்டை 27 சதவீதமாக முன்மொழிந்த பா.ஜ., அரசின் முடிவை அங்கீகரித்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
10-ஜன-202211:06:58 IST Report Abuse
periasamy அண்ணாமலைக்கு வரலாறு என்ன தெரியும் என்று பெருசா பேசுகிறார் இது திராவிடத்தின் நூறாண்டுகாலப் போராட்டம் இதில் அதிமுக சேர்ந்தவர்கள் சொந்தம் கொண்டானினால் ஒரு நியம இருக்கு இந்த தீர்ப்பே உச்சநீதி மனத்தில் போராடிப் பெறப் பட்டுள்ளது அதை அதை எதிர்ப்பவர்கள் ஆளும் பிஜெபி யம், முற்பட்ட வகுப்பினரும்தான்
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
10-ஜன-202210:59:02 IST Report Abuse
periasamy இந்த ஒரு சதவிகிதம் மட்டுமே உள்ளவர்கள்தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தொண்ணூத்தி ஐந்து சதவிகித ஆட்சி அதிகாரங்களை ருசித்தவர்கள் இப்பொழு பெரியளவில் அவர்கள்தான் இந்திய அளவில் ஆளுமையில் இருக்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் பரவலாக மீதமுள்ள சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெரும்பாலும் எங்கும் பரவலாக ஆட்சி அதிகாரங்களில் இருக்கிறார்கள் என்றால் அதற்க்கு தொடக்கம் குறித்து திராவிடம் மட்டும்தான் அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
10-ஜன-202210:43:21 IST Report Abuse
periasamy வெத்து வெடி அண்ணாமலை பேசாத மூடு பி ஜெ பி சமூக நீதி கொள்கை என்பது இ டேபிலு எஸ் ல் மூலம் ஒரு சதா விகிதம் உள்ளவர்களுக்கு பத்து சதா விகிதம் ஐடா ஒதுக்கீடு என்பது மட்டுமே மற்றதெல்லாம் அவர்களுக்கு கசக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X