டில்லி: ஒமைக்ரான் கட்டுப்பாடுகளை மீறும் கட்சிகள்மீது நடவடிக்கை பாயுமென இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
![]()
|
ஒமைக்ரான் பரவலை அடுத்து தேர்தல் நடத்தலாமா வேண்டாமா என பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஏழு மாநிலங்களில் பாதுகாப்பான முறையில் சமூக விலகலை பின்பற்றி தேர்தல் நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
![]()
|
சரியான நேரத்துக்கு தேர்தலை நடத்துவது ஜனநாயக ஆட்சியை பின்பற்றுவதற்கு சான்று என்று தெரிவித்துள்ள இந்திய தேர்தல் கமிஷன் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஒமைக்ரான் தாக்கம் காரணமாக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.
வரும் ஜனவரி 15-ஆம் தேதிவரை தேர்தல் பேரணிகள் நடத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் ஒமைக்ரான் தாக்கத்தின் அளவைப் பொருத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் எனக் கூறியுள்ளது. அதே சமயத்தில் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள் நடத்தவும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் கமிஷனர் சுகில் சந்திரா கூறுகையில் வேட்பாளர்கள் முடிந்தவரை வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட தொலைத்தொடர்பு முறைகள் மூலமாகவே வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் வெற்றிக்களிப்பில் பட்டாசு வெடிப்பது, பொதுவெளியில் ஆரவாரம் செய்வது போன்ற செயல்களுக்கு கட்டாயமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கூட்டங்களின்போது முகக்கவசம் அணிதல், கைகளில் சனிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும்போது ஐந்து நபர்களுக்குமேல் ஒரு கட்சி சார்பாக செல்லக்கூடாது. மேற்கண்ட இந்த விதிகளை எந்த கட்சியாவது மீறினால் அவர்கள் பேரணிகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement