புதுடில்லி : அன்னை தெரசாவின் 'மிஷினரிஸ் ஆப் சாரிட்டி' அறக்கட்டளையின் உரிமத்தை புதுப்பித்து, மத்திய உள்துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
![]()
|
அரசு சாரா அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை பெற, எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவை தலைமையிடமாக வைத்து இயங்கும் அன்னை தெரசாவின் மிஷினரிஸ் ஆப் சாரிட்டி என்ற அறக்கட்டளையின் வங்கி கணக்குகள் கடந்த மாதம் முடக்கப்பட்டன. எப்.சி.ஆர்.ஏ., உரிமத்தை புதுப்பிக்கக் கோரி அந்த அறக்கட்டளை சமர்ப்பித்த மனு, மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது தெரியவந்தது.
![]()
|
உரிமத்தை புதுப்பிக்கக் கோரி மிஷினரிஸ் ஆப் சாரிட்டி அறக்கட்டளை சமர்ப்பித்த மனுவில், சில தவறான தகவல்கள் இருந்ததாகவும், அதன் காரணமாகவே அந்த மனு நிராகரிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நாடு முழுதும் உள்ள 6,000க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகளின் எப்.சி.ஆர்.ஏ., உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்தது.
இதற்கு எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் மிஷினரிஸ் ஆப் சாரிட்டி அறக்கட்டளையின் உரிமத்தை புதுப்பித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதன் வாயிலாக இனி வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளைப் பெற்று, வங்கியில் உள்ள நிதியை அந்த அறக்கட்டளையால் செலவழிக்க முடியும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement