அறங்காவலர்கள் நியமனம்; தமிழக அரசு மீது எச்.ராஜா குற்றச்சாட்டு

Updated : ஜன 09, 2022 | Added : ஜன 09, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
சென்னை : ''கோவில் அறங்காவலர்கள் நியமனம் வெளிப்படை தன்மை இல்லாமல் நடக்கிறது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டினார். அவர் அளித்த பேட்டி:தி.மு.க., அரசு, ஹிந்து கோவில்களை முழுதும் சட்ட விரோதமாக அழித்து விடுவது என்று முனைப்பு காட்டி செயலாற்றி வருகிறது. இது, கண்டிக்கத்தக்கது. கோவில் நகைகளை உருக்குவது, கோவில் பணத்தில் கல்லுாரி கட்டுவது போன்றவற்றை அரசு


சென்னை : ''கோவில் அறங்காவலர்கள் நியமனம் வெளிப்படை தன்மை இல்லாமல் நடக்கிறது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டினார்.
latest tamil newsஅவர் அளித்த பேட்டி:தி.மு.க., அரசு, ஹிந்து கோவில்களை முழுதும் சட்ட விரோதமாக அழித்து விடுவது என்று முனைப்பு காட்டி செயலாற்றி வருகிறது. இது, கண்டிக்கத்தக்கது. கோவில் நகைகளை உருக்குவது, கோவில் பணத்தில் கல்லுாரி கட்டுவது போன்றவற்றை அரசு அறிவித்தது.

ஆனால், அறங்காவலர் இல்லாமல் அவற்றை செய்யக்கூடாது என்று, நீதிமன்றம் தெரிவித்து விட்டது.தமிழக அரசு, எந்த கோவில்களிலும் நிதி இருக்க கூடாது என்று முனைப்பு காட்டி செயல்படுகிறது. கோவில் சொத்துக்கள்,நிலங்களை 'டிஜிட்டல்' மயமாக்க வேண்டும் என்று, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil newsஒரு உதவி ஆணையர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் நிறுவ குறைந்த செலவே ஆகும்.ஆனால், இந்த பணிகளை கோவில் நிதியில் செய்யாமல், மீன் மார்க்கெட் கட்டுவது போன்ற பணிகள் வாயிலாக, ஹிந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது.கோவில் அறங்காவலர்கள் நியமனம் வெளிப்படை தன்மை இல்லாமல் நடக்கிறது.

அறங்காவலர் குழுவில் மகளிர், பட்டியல் இனத்தவர்கள் உள்ளிட்டோர் இருக்க வேண்டும். ஆனால், இந்த விபரங்கள் விண்ணப்பங்களில் இல்லை. விண்ணப்பங்களில் குறைபாடு இருந்ததை, அரசே நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.இதிலிருந்து, அறநிலையத் துறை ஆணையரும், அமைச்சரும் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.

'அறங்காவலர்களாக அரசியல் பின்னணி உடையவர்கள் இருக்கக் கூடாது. தெய்வ பக்தி உடையவர்கள் தான் இருக்க வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை அறங்காவலர் நியமனம் தொடர்பான சுற்றறிக்கை, விண்ணப்பங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இது, திருட்டுத்தனமாக கரை வேட்டிக்காரர்களை அறங்காவலர்களாக நியமிப்பதற்கான முயற்சி.இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
09-ஜன-202220:44:26 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam நீதி மன்ற உத்தரவின் தமிழாக்கத்தினை நமது செய்திதாளில் பிரசுரிக்கலாமே.. ஆர்வமுள்ள இந்துக்கள் தீர்ப்பை புரிந்து கொண்டாலே இந்துக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகுமே........
Rate this:
Cancel
muthu - tirunelveli,இந்தியா
09-ஜன-202217:44:57 IST Report Abuse
muthu அறங்காவலர்களாக அரசியல் பின்னணி உடையவர்கள் இருக்கக் கூடாது No BJP No ADMK. it is good let kamal gives the list to consider for the post.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
09-ஜன-202216:18:47 IST Report Abuse
Kumar மதுரையில் ஒரு பெரிய கோவிலின் அறங்காவலர் தான் நடத்தும் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு கொரானாவை காரணம் காட்டி பாதி சம்பளம் தான் தருகிறார். பல ஆண்டுகளாக அறங்காவலராக அவர்தான் இருக்கிறார்.எரிந்து போன‌ மண்டபத்தை கோவிலில் இன்னும் சரி செய்யவில்லை.அறம் தவறிய இவர்கள்தான் அறங்காவலர்கள். மீனாட்சி அம்மன் பார்த்துக்கொள்வார். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X