சென்னை: ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று(ஜன.,09) ஒருநாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் மருத்துவ குழுக்களை அமைத்து தீவிர நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. சமூகப்பரவலை குறைப்பதற்காக கடந்த 6ம் தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே அமலில் இருந்து வரும் நிலையில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை முதல் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது.

அத்தியாவசிய தேவைகளான பால், மருந்துகள், பத்திரிகை விற்பனைக்கு தடை கிடையாது. திருமணங்களுக்கு செல்வோர் திருமண பத்திரிகையை காண்பித்து பயணிக்க முடியும். உணவு டெலிவரி நிறுவனங்களின் சேவை, மற்றும் ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு அனுமதி உண்டு. காற்கறி, இறைச்சி, மளிகை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இன்று செயல்பட அனுமதியில்லை.
முழு ஊரடங்கின் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
வெறிச்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் கொரோனா ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடின. போலீசார் நகரின் பல்வேறு இடங்களிலும் தடுப்புகளை ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டனர். கொரோனா முழுஊரடங்கு காரணமாக திருக்கோவிலூரில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. ஒரு சிலர் மட்டுமே மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வந்ததை காணமுடிந்தது.
வெறிச்சோடிய சுற்றுலாத்தலங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் கடைகள் மூடப்பட்டுள்ளன. தரங்கம்பாடியில் வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டை, 400 ஆண்டுகள் பழமையான தேவாலயம் ஆகியவை மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் இன்றி கடற்கரை வெறிச்சோடியது. ஒரு சில சிறுவர்கள் கடற்கரையில் விளையாடுவதை காண முடிந்தது.
இதுபோல பூம்புகார் சுற்றுலா தளமும் மூடப்பட்டுள்ளது கோவில்கள் சர்ச்சுகள் மசூதிகள் என ஆயிற்று வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன அனைத்து பகுதிகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE