" கோவிட் பூஸ்டர் நல்ல பலன் தரும் " - பாரத் பயோடெக்

Updated : ஜன 10, 2022 | Added : ஜன 09, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
புதுடில்லி: நாளை முதல் மக்களுக்கு போடப்படவிருக்கும் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி நல்லதொரு பலனை தரும்; எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கோவாக்சின் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்டால் தற்போது பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தை விட இப்போதைய 3 வது அலை மிக வேக பரவல் காணப்படுகிறது. தடுப்பூசி போட்டவர்களை
கோவிட், பூஸ்டர், நல்ல பலன் தரும் " -  பாரத் பயோடெக்

புதுடில்லி: நாளை முதல் மக்களுக்கு போடப்படவிருக்கும் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி நல்லதொரு பலனை தரும்; எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கோவாக்சின் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்டால் தற்போது பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தை விட இப்போதைய 3 வது அலை மிக வேக பரவல் காணப்படுகிறது. தடுப்பூசி போட்டவர்களை பாதித்தாலும் இவர்கள் ஆபத்தான நிலைக்கு செல்வதில்லை. தடுப்பூசி போடாதவர்கள் ஐ.சி.யுவில் சேர்க்கப்படுகின்றனர். கோவிட் தடுப்பூசி நல்ல பலனை தந்தாலும் கோவிட் 3 வது டோஸ் பூஸ்டராக போட முடிவு செய்யப்பட்டு நாளை முதல் இந்த பணி துவங்குகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், கோவிட் களப்பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news


கோவாக்சின் தடுப்பூசி தயாரித்த பாரத் பயோடெக் சேர்மனும், டாக்டருமான கிருஷ்ண ஏலா கூறியதாவது: கோவாக்சின் தடுப்பூசி நீண்ட நாட்களுக்கு நல்லதொரு பலனை தந்துள்ளது. எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது போல் 3வது பூஸ்டர் மிக உதவியாக இருக்கும். குழந்தைகள் ,பெரியவர்கள் என கோவாக்சின் தடுப்பூசி உலகம் முழுவதும் பயன்படுத்தும் விதமாக எங்களின் இலக்கு வெற்றி பெற்றுள்ளது. கோவாக்சின் போட்ட 90 சதவீதத்தினர் இந்த தொற்றுக்கு எதிரான சக்தியை பெற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .
3 வது டோஸ் மிக முக்கியமானது. பெரியவர்கள் உயிர் காத்திடவும், திடமான, நீண்ட கால ஒரு எதிர்ப்பு சக்தியை தரவல்லதும் ஆகும். இது தொடர்பான சோதனையில் பெரிய எதிர்மறை நிகழ்வுகள் ஏதுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜன-202219:36:11 IST Report Abuse
அப்புசாமி
Rate this:
Cancel
sasikumar - madurai,இந்தியா
09-ஜன-202216:50:53 IST Report Abuse
sasikumar இங்க வந்து கம்பு சுத்துறவங்க தான் முதல்ல பூஸ்டர் போடுப்பாங்க... ஏனையோர் இவர்கள் குழம்பி கூறுவதை யாரும் நம்ப வேண்டாம்... நம் உயிர் முக்கியம் என்றால் போட்டுக்கொள்ளுங்கள்....
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
10-ஜன-202201:19:21 IST Report Abuse
Sathish இலவசமாக கிடைத்தால் எல்லோரும் போட்டுக்கொள்ளத்தான் செய்வார்கள். கம்பு சுத்துவது காசு செலவு செய்து தடுப்பூசி போட்டவர்கள் தான். மறந்துபோச்சா உனக்கு? கோவாக்சின் ஒரு டோஸ் 1500 ரூபாய் விற்றார்கள். முதல் டோஸ் அரசு இலவசமாய் கொடுத்தது பின்பு இரண்டாவது டோஸ் போட கோவாக்சின் கிடைக்காமல் மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சென்று போட்டு கொண்டார்கள். காசு இருந்தவன் போட்டான் இல்லாதவன் என்ன செஞ்சான்? யோசிச்சியா? குடும்பத்தில் 5 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நீயும் நானும் நம் உயிர் நமது குடும்பத்தில் உள்ளவர்கள் உயிர் முக்கியம் என்று காசு செலவு செய்து போட்டுக்கொள்வோம். தினக்கூலி வாங்குறவன் என்ன செய்வான்? கம்பு சுத்துறது காய் அடிக்கிறது என்று உங்கள் ஊர் பேச்செல்லாம் பேசிக்கிட்டு இருக்காமல் நடைமுறை என்ன என்று தெரிந்துகொண்டு பேசு. அரசு எல்லோருக்கும் எப்போதும் இலவசமாக கொடுத்தால் மட்டுமே தடுப்பூசி பயன்தரும்....
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
09-ஜன-202216:05:15 IST Report Abuse
Visu Iyer ஒரு கதையை சம்பவமாக பகிர்ந்து கொள்ளவா....? புத்திசாலிகள் புரிந்து கொள்ளட்டும் ./// ஒரு வயதானவர் கூடையில் வைத்து பேருந்து நிலையத்தில் வாழை பழம் மூன்று பத்து ரூபாய் என்று விற்றுக் கொண்டு போகிறார் ஒருவரும் வாங்கவில்லை... அவருக்கு பின்னாடியே ஒரு சிறுவன் நான்கு பழம் பத்து ரூபாய் என்று விற்கிறார்.. அவர் வியாபாரம் சூடு பிடிக்கிறது.. அந்த கிழவரிடம்.. நீங்களும் நான்கு பத்து ரூபாய் என்று விற்று இருந்தால் உங்களுக்கு வியாபாரம் ஆகி இருக்குமே என்று கேட்டதற்கு அவர் சொல்கிறார்...... அந்த பையன் என்னுடைய பேரன் தான்.. நான்கு பத்து ரூபாய்க்கு விற்றால் கொஞ்சம் தான் விற்க முடியும்.. முதலில் விலை அதிகமாக நான் விற்க அதையே குறைவாக விற்பதால் அதிகமாக விற்க முடிகிறது.. இது சாதனை அல்லவா என்று கிழவர் பாடம் சொல்லி தருகிறார்.. ////வைரஸ் வரும் போதே தடுப்பூசியும் வருகிறதே... என்று எதையாவது நினைத்து குழப்பி கொள்ள போறீங்க.. நான் ஒரு ரிலாக்ஸ் க்கு கதை சொல்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X