பொங்கல் பரிசு தொகுப்பை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு

Updated : ஜன 09, 2022 | Added : ஜன 09, 2022 | கருத்துகள் (55) | |
Advertisement
சென்னை: அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய ரேசன் கடைகளில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல்
பொங்கல் பரிசு, முதல்வர் ஸ்டாலின், ஸ்டாலின்,

சென்னை: அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய ரேசன் கடைகளில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில், 1,297 கோடி ரூபாய் செலவில் இத்தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.


latest tamil news


பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை நேரடியாக ரேசன் கடைகளில் ஆய்வு செய்தேன். மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்தை பற்றி சிலர் தவறான விஷமத்தனமான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.


latest tamil news


எனவே, இந்த பணிகள் முறையாக நடப்பதையும், தரமான பொருட்கள் எவ்வித புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்க பெறுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கும் பணிகளை, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவரும் தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
10-ஜன-202213:27:03 IST Report Abuse
INDIAN Kumar 21 பொருட்கள் தேவை இல்லை பொங்கலுக்கு தரமான5 பொருட்கள் போதும்.
Rate this:
Cancel
10-ஜன-202210:38:45 IST Report Abuse
ஆரூர் ரங் வண்டலூர்ல இருக்க வேண்டிய ஜந்துக்களை ரேசனில் கொடுப்பது🤔 சைனீஸ் டிஷ் செய்யவா?
Rate this:
Cancel
10-ஜன-202210:38:25 IST Report Abuse
ஆரூர் ரங் வண்டலூர்ல இருக்க வேண்டிய ஜந்துக்களை ரேசனில் கொடுப்பது🤔 சைனீஸ் டிஷ் செய்யவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X