புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த சில நாட்களாக கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,55,28,004 ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வைரசால் 3,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த தொற்று பிப்., மாத மத்தியில் உச்சம் பெற்று பின்னர் குறைய துவங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கோவிட் சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை, சுகாதாரத்துறை செயலர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல துறை வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE